விஷ்ணுவர்தன்

இந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (1950–2009) From Wikipedia, the free encyclopedia

விஷ்ணுவர்தன்
Remove ads

விஷ்ணுவர்தன் (கன்னடம்: ವಿಷ್ಣುವರ್ಧನ್) (செப்டம்பர் 18, 1950 - டிசம்பர் 30, 2009[1]) இந்திய மாநிலம் கர்நாடகாவில் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் மற்றும் பாடகராவார். கன்னடத் திரைப்பட உலகில் மிகவும் திறமை வாய்ந்த, பல்வேறு வேடங்களிலும் எளிதாக நடிக்கக்கூடியவர் என பெயர் பெற்றவர். காதல், வீரம், பாசம், நகைச்சுவை மற்றும் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்தும் பாடகராகவும் தம் பன்முக திறனை வெளிப்படித்தியவர். அவரது இரசிகர்களால் சாகச சிம்மம் என்று அழைக்கப்பட்டவர். சம்பத் குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவருக்கு நாகரஹாவு என்ற முதல் படத்தை இயக்கிய இயக்குநர் புத்தன்ன கனகல் விஷ்ணுவர்தன் என்ற திரைப்பெயரை சூட்டினார்.

விரைவான உண்மைகள் ವಿಷ್ಣುವರ್ಧನ விஷணுவர்தன், இயற் பெயர் ...
Remove ads

குடும்பம்

விஷ்ணுவர்தனின் மறைந்த பெற்றோர்கள் நாராயண ராவ் மற்றும் காமாட்சியம்மா ஆவர். அவரது தந்தையாரும் திரைப்படத்துறையில் கலைஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். அவரது குடும்பம் மைசூரின் சாமுண்டிபுரத்தில் வாழ்ந்து வந்தது. அவரது உடன்பிறப்பான ரமா ராமசந்நதிரா ஓர் கதக் நடனக் கலைஞர் ஆவார்.

அவரது மனைவி பாரதி விஷ்ணுவர்தனும் ஓர் திரைப்பட நடிகையாவார். அவரது திருமணம் 1975இல் பிப்ரவரி 27ஆம் நாள் பெங்களூருவில் நடந்தது. அவர்கள் இரு பெண் குழந்தைகளை,கீர்த்தி மற்றும் சந்தனா, தத்தெடுத்து வளர்த்தனர். கீர்த்தியின் கணவர் கன்னட திரையுலகில் வளர்ந்துவரும் ஓர் திரைப்பட நடிகர் அனிருத் ஆவார்.

விஷ்ணுவர்தனுக்கு நான்கு சகோதரிகளும் ஓர் அண்ணனும் உண்டு.

Remove ads

இளமை

விஷ்ணுவர்தன் மைசூரின் கோபாலசாமி பள்ளியிலும் பெங்களூருவின் கன்னட மாதரி பள்ளியிலும் கல்வி கற்றார். பெங்களூருவின் தேசிய கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொண்டார்.

திரைவாழ்வு

தேசிய விருது வாங்கிய கன்னடப்படம் வம்சவிருக்சா என்ற கிரிஷ் கர்னாட் இயக்கிய திரைப்படத்தில் முதலில் நடித்தாலும் அவரை வெளியுலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது புத்தன்ன கனகல் இயக்கிய நாகரஹாவு திரைப்படமாகும். தமது முப்பத்தைந்து ஆண்டு திரைவாழ்வில் பல்வேறு வேடங்கள் ஏற்று 197 படங்களில் நடித்து சாதனை புரிந்துள்ளார். அவரது சில புகழ்பெற்ற திரைப்படங்கள்:

  • நாகரஹாவு
  • முதின ஹாரா
  • ஹொம்பிசிலு
  • சாகச சிம்மா
  • பந்தனா
  • நாகர ஹோலெ
  • நிஷ்கர்ஷா
  • எசமானா
  • பூதய்யன மகா அய்யூ
  • ஆப்தமித்ரா
  • சூர்யவம்ஷா

அவருக்கு பீடார் குருத்துவாரா ஒன்றில் 1980ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கைவளையல் (கடா) ஒன்றை எப்போதும் அணிந்து வந்தார்.

தமிழ் திரையுலகில் லட்சுமி இயக்கிய மழலைப் பட்டாளம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தவிர ரஜினிகாந்துடன் விடுதலை,ஸ்ரீராகவேந்திரா திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பாடகராக

திரைப்படங்களில் அவ்வப்போது பாடிவந்த விஷ்ணுவர்தன் தற்காலம் பக்திப்பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். நாகர ஹோலெ திரைப்படத்தில் முதலில் பாடினார். அவரது முதல் பக்திப்பாடல் தொகுப்பு சோதிரூப அய்யப்பா பெரும் வரவேற்பைப் பெற்றது.

அவரது சில புகழ்பெற்ற திரைப்பாடல்கள்:

  • ஹெகித்தாரு நீனே சென்னா - சாகச சிம்மா
  • சசியா கண்டு மோடா ஹெலிது - சிரிதனக்கே சவால்
  • துது அண்ணா தின்னோக்கே - ஜிம்மி கல்லு
  • பேடா அன்னோரோ உன்டே - சிதிதேட்டா சகோதரா
  • கன்னடதாவே நம்மம்மா - மோஜுகரா சோகுசுகரா.
Remove ads

இறப்பு

விஷ்ணுவர்தன் கடுமையான மூச்சுத்திணறலை அடுத்து மைசூரின் விக்ரம் மருத்துவமனையில் திசம்பர்,30 2009 அன்று விடிகாலை 0230 மணிகளுக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு 0330 மணியளவில் இயற்கை எய்தினார்.[2]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads