வி. சீ. கந்தையா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வி. சீ. கந்தையா (பிறப்பு: சூலை 29, 1920) ஈழநாட்டின் மட்டக்களப்பின் தென்பகுதியில் அமைந்த மண்டூரில் தோன்றியவர். பண்டிதர் என்றும், புலவர் என்றும், எழுத்தாளர் என்றும் பலராலும் அறியப்பட்டவர். இவர் உருவாக்கிய மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
கந்தையா இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மண்டூரில் வினாசித்தம்பி என்பவருக்கும், சின்னாத்தை என்பருக்கும் பிறந்தார்.
கல்வி
இவர் தன் இளமைக்காலத்தில் வ. பத்தக்குட்டி உபாத்தியாயரிடமும், புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையிடமும், விபுலாநந்தரின் குருவாகிய குஞ்சித்தம்பி உபாத்தியாயரிடமும் கல்வி பயின்றார். பிற்காலத்தில் யாழ்ப்பாணத்து ஆரிய பாசா அபிவிருத்திச் சங்கப் பண்டிதர் பட்டமும் (1943), மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டமும் (1944), இலங்கைப் பல்கலைக்கழகத்தி்ன் தமிழ் வித்துவான் பட்டமும் (1952), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.ஓ.எல். (B.O.L) பட்டமும் (1954) பெற்றார்.
Remove ads
எழுதிய நூல்கள்
- மட்டக்களப்புத் தமிழகம்
- கட்டுரையியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads