அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டின் சிதம்பரத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1929 ஜூலையில் ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டு 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது.

Remove ads
தொடக்க நிலை
ராஜா சர் அண்ணாமலை செட்டியார், அரசுக்கு அளித்த கல்லூரிகள், சொத்துகள், ரூ.20 லட்சம் ஆகியவற்றைக் கொண்டு 1928-ல் தனிச் சட்டம் மூலம் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.இந்த தனிச் சட்டத்தின்படி ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் வாரிசுகளுக்கு நிறுவனர் என்ற அங்கீகாரத்துடன் சில அதிகாரங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டன.[2] 1929ம் ஆண்டு சட்டத்தின்படி அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஒரு அரசு பல்கலைக்கழகம் என்றாலும் அதில் இடம்பெற்ற ஒரு சில பிரிவுகள் இப்பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகத்தைப் போல் செயல்படும் வாய்ப்பினை அளித்திருந்தது. அதனுடைய நிறுவனராக இருந்த அண்ணாமலைச் செட்டியார் மற்றும் அவரது வாரிசுகளுக்கு அதிகாரங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன. பல்கலைக் கழகத்தை தோற்றுவிக்க முக்கிய காரணமாக இருந்தார் என்பதால் ஆங்கிலேய ஆட்சியில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி நிறுவனர் பல்கலைக்கழக இணைவேந்தராகவும் செயல்பட்டு வந்தார். பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க மூன்று பெயர்களைக் கொண்ட பட்டியலை வேந்தர் (ஆளுநர்) அவர்களிடம் இணைவேந்தர் அளிப்பார். இப்பட்டியலை தயார் செய்வது இவரது தனிப்பட்ட உரிமையாகும். முன்மொழியப்பட்ட மூவரில் ஒருவரை வேந்தர், துணைவேந்தராக தேர்வு செய்து நியமனம் செய்வார். அவ்வாறு பணியமர்த்தப்பட்ட துணை வேந்தர் பல்கலைக்கழக அனைத்து பணிகளுக்கும் பொறுப்பான நிர்வாகியாக இருப்பார்.பல்கலைக்கழகத்தின் நிதி நிர்வாகம், ஆசிரியர், ஊழியர் பணியமர்த்தல், கல்வி மற்றும் வகுப்புகள், அன்றாட நிர்வாகம் அனைத்தும் இவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.[3]
இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகள் உள்ளன, தமிழகப் பலகலைக் கழகங்களில் இங்கு தான் முதன் முதல் (30 சனவரி 2010) தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற்றது.
Remove ads
நிதி நெருக்கடி
பல்கலைக்கழகத்தில் நிலவிவரும் நிர்வாக குளறுபடிகள் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் இதன் இருந்ததால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.[4]
நிர்வாக சீரமைப்பு
தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களுக்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை மாற்றுவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு 1928-ல் கொண்டுவரப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் முடிவுக்கு வருகிறது.[5][6][7][8]
இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற முக்கியப் பிரமுகர்கள்
- ரா. வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர்
- தி. மா. ஜம்புலிங்கம் முதலியார்
- க.அன்பழகன்
- இரா. நெடுஞ்செழியன்
- எஸ்.டி.சோமசுந்தரம்
- பண்ருட்டி இராமச்சந்திரன்
- பழ. நெடுமாறன்
- இயக்குநர் கே.பாலசந்தர்[9]
- மெ. மெய்யப்பன்
- சிற்பி பாலசுப்பிரமணியம்
- அ. ச. ஞானசம்பந்தன்
- தனிநாயகம் அடிகளார், உலகளவில் தமிழ் ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்
- டி. ராஜேந்தர், தமிழ்த் திரைப்பட நடிகர்
- வீ. தி. சம்பந்தன், மலேசியத் தமிழர், மலேசிய இந்திய காங்கிரசு நிறுவனர்
- கோவி. மணிசேகரன்
- எஸ். சாதிக் முன்னாள் துணைவேந்தர் சென்னைப் பல்கலைக்கழகம்
- முனைவர் சைலேந்திர பாபு IPS முன்னாள் தமிழ்நாடு காவல்துறை சட்ட ஒழுங்கு பிரிவு தலைமை இயக்குநர் (DGP)
Remove ads
பணியாற்றிய அறிஞர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads