வி. டி. கிருஷ்ணசாமி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வி. டி. கிருஷ்ணசாமி (V. D. Krishnaswami) (பிறப்பு:18 சனவரி 1905 – இறப்பு: 15 சூலை 1970) ஒரு இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். தென்னிந்தியாவில் குறிப்பாக சென்னை மாநகரைச் சுற்றியுள்ள கற்கால, பெருங்கற்கால இடங்களை 1940கள் -1950கள் காலகட்டத்தில் பிரித்தானிய ஆய்வாளர் மோர்டிமர் வீலருடன் சேர்ந்து வெளிக்கொணர்ந்தமைக்காக அறியப்படுகிறார்.[1]
வாழ்க்கை
மதராசு மாநகரில் (தற்போது சென்னை) 18 சனவரி 1905 அன்று பிறந்த கிருஷ்ணசாமி சென்னை மாநிலக் கல்லூரியில் நிலவியல் படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை நிலவியல் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் சுரகம் மற்றும் உலோகவியல் துறைப் பேராசிரியராக 1929-ஆம் ஆண்டு வரை பணி செய்தார். பின்னர் 1930-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் அகழாய்வுப் பயிற்சி பெற்றார்.
சாலார் ஜங் அருங்காட்சியகம் (ஐதராபாத்), இந்திய அருங்காட்சியகம் (கொல்கத்தா) ஆகியவற்றுக்கான இயக்குநராகவும் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் துணை தலைமை இயக்குநராகவும் பணியாற்றினார்.
கருநாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் 15 சூலை 1970 அன்று தன் 66-ஆம் அகவையில் காலமானார்.
Remove ads
ஆய்வு அறிக்கைகள்
- Environmental and Cultural Changes of Prehistoric man near Madras, 1938
- Stone Age in India, 1947
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads