வி. பி. கந்தசாமி
இவர் தமிழ்நாட்டில் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆவார். From Wikipedia, the free encyclopedia
Remove ads
வி. பி. கந்தசாமி என்பவர் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2019 தமிழ்நாடு சட்டமன்ற இடைதேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 12,000 கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர் ஆவர். காமநாயக்கன்பாளையம் இவரின் சொந்த ஊரும் வசிக்கும் இருப்பிடமாகும். இவர் மட்டுமின்றி மறைந்த முன்னாள் ச.ம.உவுமான ஆர். கனகராஜ் அவர்களின் சொந்த ஊரும் இருப்பிடமும் காமநாயக்கன்பாளையம் ஆகும்.[1]
Remove ads
சூலூர் சட்டமன்ற இடைத் தேர்தல்
2016ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு 36,000 வாக்கு வித்தியாசத்தில் சூலூர் தொகுதியில் ஆர். கனகராஜ் வெற்றி பெற்றார். இவர் மாரடைப்பு காரணமாக 2019 ம் ஆண்டு காலமானார். பின் இந்த தொகுதியில் 19.05.2019 அன்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின் வாக்குகள் 23.05.2019 அன்று வெளியிடப்பட்டது. அதில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வி. பி. கந்தசாமி 12,000 கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[2]
Remove ads
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், 2021
2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் அதிமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட்டார். தேர்தல் முடிவில் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளரும் பிரீமியர் செல்வம் (எ) காளிசாமி அவர்களை தோற்கடித்தார். தமிழகத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6, 2021 ல் தேர்தல் நடத்தப்பட்டு மே2, 2021 ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் இந்த தொகுதியில் 2,41,653 வாக்குகள் பதிவானது. இதில் அதிமுக வேட்பாளர் இவர் 1,18,968 வாக்குகளை பெற்று எதிர் வேட்பாளர் பிரீமியர் செல்வத்தை வெற்றி பெற்றார். பிரீமியர் செல்வம் 87,036 வாக்குகளை பெற்றார். மொத்தத்தில் 31,932 வாக்கு வித்தியாசத்தில் எதிர் வேட்பாளர் திமுக காளிசாமி தோற்கடிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று வி. பி. கந்தசாமி வெற்றி பெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads