வி. வசந்தா
தென்னிந்திய திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
வி. வசந்தா (சில இடங்களில் சி. வசந்தா என்றும் குறிப்பிடப்படுகிறார், இறப்பு 19, மே, 2023, V. Vasantha) என்பவர் தெனிந்திய நாடக, திரைப்பட நடிகை ஆவார். 70களிலும், 80களிலும் வெளியான பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார். வசந்தா எம். கே. தியாகராஜ பாகவதரின் நாடக்குழுவில் தன் நடிப்பு வாழ்க்கையைத் துவக்கினார். இவர் இரவும் பகலும் என்ற படத்தில் ஜெய்சங்கருக்கு சோடியாக அறிமுகமானார். தொடர்ந்து கார்த்திகை தீபம் படத்தில் அசோகனுக்கு இணையாகவும் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் நாயகியாக நடித்தார். பின்னர் அக்கா, அம்மா வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.[1] மேலும் எஸ். வி. சகஸ்ரநாமத்தில் நாடக்குழுவில் பட நாடகங்களில் நடித்துவந்தார்.[2]
Remove ads
இறப்பு
மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் பாதிக்கபட்டிருந்த வசந்தா 2023 மே 19 அன்று தன் 82 வயதில் சென்னையில் இறந்தார்.[3]
தேர்ந்தெடுத்த திரைப்படவியல்
- இரவும் பகலும் (1965)
- கார்த்திகை தீபம்
- எங்க வீட்டுப் பெண் (1965)
- இரு வல்லவர்கள் (1966)
- ஆலயம் (1967)
- எங்க ஊர் ராஜா (1968)
- கணவன் (1968)
- சக்கரம் (1968)
- பத்தாம் பசலி (1970)
- நங்கூரம் (1979)
- மாம்பழத்து வண்டு (1979)
- ஆயிரம் வாசல் இதயம் (1980)
- ராணுவ வீரன் (1981)
- எச்சில் இரவுகள் (1982)
- ராணித்தேனீ (1982)
- மூன்றாம் பிறை (1982)
- மூன்று முகம் (1982)
- அந்த 7 நாட்கள் (1981)
- ஓசை (1984)
- ஸ்ரீ ராகவேந்திரா (1985)
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads