ராணித்தேனீ
ஜி. என். இரங்கராஜன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராணித் தேனி (Rani Theni) என்பது 1982ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் கமல்ஹாசன் ஒரு நீண்ட விருந்தினர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பின்னணிப் பாடகர் தீபன் சக்ரவர்த்தி முதன்முதலில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். பெண் கதாபாத்திரங்களில் மகாலட்சுமி/ஸ்ரீ மற்றும் வனிதா கிருஷ்ணசந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் கமல்ஹாசன் பிரதான கதையுடன் எந்த தொடர்பும் இல்லாத நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ஒரு காட்சியில் மட்டுமே முக்கிய வில்லன் சிவச்சந்திரனுடன் உரையாடுகிறார், இவர் விளையாட்டுப் பிள்ளை மற்றும் காசநோவா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்; இவரது பாத்திரம் கதாநாயகியால் கொல்லப்படுகிறது.
இந்த படம் சேலம் மற்றும் மாடர்ன் தியேட்டரில் படமாக்கப்பட்டது. மேலும், தொடருந்து பாதையில், காட்சி படமாக்கப்பட்ட போது கதாநாயகியினை தகுந்த நேரத்தில் கதாநாயகனால் காப்பாற்றப்பட்டார். கதாநாயகி அதிசயமாக உயிர் தப்பினார். பின்னர் இது குறித்து கேட்டதில் கதாநாயகி, தொடருந்து வருவது படப்பிடிப்பின் ஒரு பகுதி என்ற எண்ணத்தில் இருந்துவிட்டதாக குறிப்பிட்டார்.
Remove ads
நடிகர்கள்
- மகாலட்சுமி பார்வதியாக
- தீபன் சக்ரவர்த்தி செல்வமாக
- சிவசந்திரன் சேகராக
- வனிதா கிருஷ்ணசந்திரன் கனகமாக
- சாருஹாசன்
- தேங்காய் சீனிவாசன் துளசிலிங்கமாக
- டி. கே. எஸ். நடராஜன்[2]
- கமல்ஹாசன் மில்லராக (விருந்தினர் தோற்றம்)
- ஒய். ஜி. மகேந்திரன் (விருந்தினர் தோற்றம்)
இசை
இப்படப் பாடல்கள் இளையராஜாவின் இசையில் உருவாயின.[3]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads