வெடியரசன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெடியரசன் (Vedi Arasan) கி.மு 200 இல் வாழ்ந்ததாக அறியப்படும் ஈழத்தமிழ் மன்னர். விஷ்ணுபுத்திர வெடியரசன் என்றும் அழைக்கப்படும் இம் மன்னர் இலங்கையின் நெடுந்தீவு, காரைநகர் போன்ற இடங்களில் தன்வம்சத்தோடு ஆட்சி செய்துள்ளார். தற்காலத்திலும் இவனது வம்சத்தினர் யாழ்ப்பாணத்திலுள்ள காரைநகர், தொல்புரம், வட்டுக்கோட்டை, நவாலி, ஊர்காவற்துறை, மன்னார், பருத்தித்துறை, நெடுந்தீவு ஆகிய இடங்களிலும், பெரும்பாலானோர் மட்டக்களப்பிலும் வாழ்கின்றனர்.[1] இம் மன்னர் தனது ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய கோட்டை தற்பொழுதும் நெடுந்தீவில் காணப்படுவதோடு வெடியரசன் கோட்டை என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது. காரைநகரில் வெடியரசன் வீதி என்ற பெயரில் வீதியொன்றும் காணப்படுகின்றது. இம்மன்னருடைய வம்சாவழியினர் முக்குவர் என்ற சாதிப் பெயரால் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சமூகமாக இல்லாமல் இருக்கின்றனர். மட்டக்களப்பைப் பொறுத்தவரை ஓல்லாந்தர் காலத்தில் இருந்து ஆதிக்க சமூகமாகக் காணப்படுகின்றனர்.
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
Remove ads
இவற்றையும் காண்க
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads