வேசர கட்டிடக்கலை

From Wikipedia, the free encyclopedia

வேசர கட்டிடக்கலை
Remove ads

வேசரக் கட்டிடக்கலை (Vesara) என்பது வட இந்தியாவின் நகராக் கட்டிடக்கலையும், தமிழகக் கட்டிடக் கலையும் கலந்த கலப்பின வடிவம் ஆகும். வேசரக் கட்டிடக்கலைப் பாணியிலான கோயில்கள் 11ஆம் நூற்றாண்டில் தற்கால கர்நாடக மாநிலத்தை ஆண்ட ஹோய்சாலப் பேரரசால் நிறுவப்பட்டது..[1][2][3]இந்தியக் கோயில் கட்டிடக் கலையின் ஆறு வடிவங்களில் வேசரக் கட்டிடக்கலையும் ஒன்றாகும். மற்றவைகள் தமிழகக் கட்டிடக்கலை, நகராக் கட்டிடக்கலை, பூமிஜா கட்டிடக்கலை, கலிங்கக் கட்டிடக்கலை மற்றும் வரதா கட்டிடக்கலைகள் ஆகும்.[4]

Thumb
பேகூர் நாகேஸ்வரர் கோயில் (அருகில்) மற்றும் பேளூர் சென்னகேசவர் கோயில் (தொலைவில்), ஹோய்சாலப் பேரரசு, 11ஆம் நூற்றாண்டு
Thumb
சென்னகேசவர் கோயிலின் அலங்காரக் கூரைகள், 11ஆம் நூற்றாண்டு
Thumb
சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம், 11ஆம் நூற்றாண்டு
Thumb
கேதாரேஸ்வரர் கோயில், ஹளேபீடு, 11ஆம் நூற்றாண்டு
Thumb
சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம், 11ஆம் நூற்றாண்டு

பொதுவாக வேசரக் கட்டிடப்பாணியிலான கட்டிடங்களின் அடித்தளம் அல்லது கழுத்துக்கு மேல் உள்ள பகுதி வட்ட வடிவில் இருக்கும்.

Remove ads

பெயர்க் காரணம்

Thumb
வேசரக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இரட்டைக் கோபுர கோயில், சூதி, கர்நாடகம், ஆண்டு 1060

வேசரா எனும் சொல்லிற்கு கோவேறுகழுதை என்று பொருள்[2] குதிரைக்கும், கழுதைக்கும் பிறந்தது கோவேறுகழுதை போன்று, வட இந்தியக் கட்டிடக்கலை மற்றும் தென்னிந்தியக் கட்டிடக்கலைகளின் கலைவயால் தோன்றியது வேசரா கட்டிடக்கலை என ஆகம சாத்திர நூலான காமிக ஆகம நூல் கூறுகிறது.[3]

Thumb
மகாகூடக் கோயில்கள், 7ஆம் நூற்றாண்டு

வரலாறு

Thumb
Thumb
வேசாராக் கட்டிடக் கலையை விளக்கும் இலக்குண்டி காசிவிசுவேசுவரர் கோயிலின் வரைபடம் (கிபி 1075)

வேசாரக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட கோயில்கள் கிருஷ்ணா ஆற்றுக்கும், துங்கபத்திரை ஆற்றுக்கும் இடைப்பட்ட வடக்கு கர்நாடக பிரதேசத்தில் மட்டும் காணப்படுகிறது. 10 & 11ஆம் நூற்றாண்டுகளில் போசாள அரசமரபினர் வேசாரக் கட்டிடக்கலையில் பல கோயில்கள் கட்டி எழுப்பினர்

வேசரக் கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டான கோயில்கள்

  1. பேகூர் நாகேஸ்வரர் கோயில்
  2. பேளூர் சென்னகேசவர் கோயில்
  3. ஹளேபீடு கேதாரேஸ்வரர் கோயில்
  4. சோமநாதபுரம் சேன்னகேசவர் கோயில்
  5. காசிவிசுவேசுவரர் கோயில், இலக்குண்டி
  6. மகாகூடக் கோயில்கள்

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads