மகாகூடக் கோயில்கள்

இந்திய மாநிலம் கருநாடகாவிலுள்ள கோயில்கள் From Wikipedia, the free encyclopedia

மகாகூடக் கோயில்கள்map
Remove ads

மகாகூடக் கோயில்கள் (Mahakuta group of temples) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள மகாகூடம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள் கோயில்களாகும். இது இந்துக்களுக்கு ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாகவும், நன்கு அறியப்பட்ட சைவ மடத்தின் இருப்பிடமாகவும் உள்ளது. இந்த கோவில்கள் பொ.ச. 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டு காலத்தவை. மேலும் பாதமி சாளுக்கிய வம்சத்தின் ஆரம்பகால மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன. இது அருகிலுள்ள அய்கொளெயில் உள்ள கோயில்களைப் போன்ற கட்டிடக்கலை பாணியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. [1] மேலும், இந்த வளாகத்தில் உள்ள இரண்டு குறிப்பிடத்தக்க கல்வெட்டுகளில் உள்ள தகவல்கள் பொ.ச. 595-602 க்குமிடையில் தேதியிடப்பட்ட 'மகாகூடக் தூண் கல்வெட்டு' ( சமசுகிருத மொழியிலும் கன்னட எழுத்துமுறையிலும் எழுதப்பட்டுள்ளது ); [2] மேலும், கி.பி 696–733 க்கு இடையில் தேதியிடப்பட்ட விஜயாதித்தனின் காதலியான வினபோட்டியைப் பற்றிய கல்வெட்டு கன்னட மொழியிலும் பிற எழுத்துக்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. [3]

விரைவான உண்மைகள் மகாகூடா மகாகோட்டா, நாடு ...
Remove ads

அடிப்படை திட்டம்

7 ஆம் நூற்றாண்டின் கர்நாடக கைவினைஞர்கள் வட இந்திய நாகரா பாணி கோயில்களை ஒட்டியுள்ள தென்னிந்திய திராவிட பாணியிலான கோயில்களைக் கட்டுவதன் மூலம் தங்கள் கட்டிடக்கலையில் ஒரு குறிப்பிட்ட தேர்ந்தெடுப்பை அடைந்தனர். [4] மேலும், அவற்றின் திராவிட மற்றும் நாகரா பாணிகள் உள்ளூர், பூர்வீக மாறுபாடுகள் மற்றும் நவீன தமிழ்நாட்டில் தெற்கில் நிலவிய கட்டடக்கலையுடனும் மத்திய இந்தியப் பாணிகளுடனும் தொடர்பில்லாதவை. [5] ஒரு பாணியின் அடிப்படை திட்டத்தை மற்றொன்றின் பண்புகளுடன் இணைப்பதன் மூலம் அவர்கள் இதை அடைந்தனர். இங்குள்ள திராவிட பாணியிலான கோயில்கள் சன்னதிக்கு மேல் கட்டப்பட்ட கோபுரத்தைக் கொண்டுள்ளன. நாகரா பாணியிலான கோயில்கள் ஒரு சன்னதிக்கு மேல் ஒரு வளைவு கோபுரத்தைப் பயன்படுத்துகின்றன, இது ஒரு சதுரத் திட்டத்தைக் கொண்டுள்ளது, மேலும் இது ஒரு ரிப்பட் கல்லால் மூடப்பட்டுள்ளது. இந்த கலப்பின பாணியின் வளர்ச்சி, இரண்டு அடிப்படை கட்டடக்கலை பாணிகளின் அச்சுக்கலை அம்சங்களை இணைப்பதன் மூலம் அடையப்படுகிறது, இது கர்நாடக பிராந்தியத்தின் ஒரு தனித்துவமாகக் கருதப்படுகிறது மற்றும் வெசரா பாணியிலான கட்டிடக்கலைகளின் தொடக்கத்தை வரையறுக்கிறது. [6]

Remove ads

நீருற்று

கோயில் வளாகத்திற்குள் ஒரு இயற்கை மலை நீரூற்று அமைந்துள்ளது. இது விஷ்ணு புட்கரணி ("விஷ்ணுவின் தாமரைக் குளம்") மற்றும் பாபவிநாச தீர்த்தம் என்று அழைக்கப்படும் ஒரு குளத்தில் விழுகிறது. வளாகத்தில் உள்ள பல சிவாலயங்களில், திராவிட பாணியில் கட்டப்பட்ட மகாகுடேசுவரர் கோயில், மல்லிகார்ச்சுனர் கோயில் ஆகியவை மிகப் பெரியவை. விஷ்ணு புட்கரணி குளத்தின் மையத்தில் ஒரு சிறிய சன்னதி உள்ளது, அதில் பஞ்சமுக லிங்கம் என அழைக்கப்படும் ஒரு சிவ இலிங்கம் அமைந்துள்ளது. நான்கு திசைகளிலும் நான்கு முகங்களும், ஆகாயத்தை நோக்கி ஒரு முகமும் அமைந்துள்ளது. [1]

Remove ads

கல்வெட்டுகள்

மகாகூட வளாகம் வரலாற்றாசிரியர்களுக்கு 7 ஆம் நூற்றாண்டின் இரண்டு முக்கியமான கல்வெட்டுகளை வழங்கியுள்ளது. மகாகூடக் தூண் கல்வெட்டு, [7] பொ.ச. 595-602 க்கு இடையில் தேதியிடப்பட்டது, முதலாம் புலிகேசியின் அரசி துர்லபாதேவி வழங்கிய மானியத்தை பதிவு செய்கிறது. மகாகூடேசுவர நாத கடவுளுக்கு பட்டடக்கல் மற்றும் அய்கொளே உள்ளிட்ட பத்து கிராமச் சபைகளின் ஒப்புதலுடன் ராணி மானியத்தை வழங்கினார். கூடுதலாக, கல்வெட்டு சாளுக்கியப் பரம்பரை, அவர்களின் போர்ப் பயணம், அவர்களின் வெற்றிகள். ஆரம்பகால நினைவுச்சின்னங்கள் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்குகிறது. [2] இந்த தூண் தர்ம-ஜெயஸ்தம்பா ("மதத்தின் வெற்றியின் தூண்") என்ற பெயரில் செல்கிறது. மேலும், பிஜாப்பூர் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் உள்ளது. [3] மன்னன் விஜயாதித்தனின் காதலியான வினபோட்டிக்கு கூறப்பட்ட மற்ற கல்வெட்டு மகாகூடேசுவரர் கோயிலின் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மகாகூடேசுவரருக்கு மாணிக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி குடையை வழங்கிய இது விவரிக்கிறது.

புகைப்படத் தொகுப்பு

Thumb
மகாகூடக் கோயில் குளம்
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads