முயல்
லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி பேரினம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முயல்கள் (Hares) மற்றும் கழுதை குழிமுயல்கள் (Jackrabbits) லெபோரிடே என்ற குடும்பத்தின் கீழ் லெபுஸ் (Lepus) என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குழிமுயல்கள் எந்த குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனவோ அதே குடும்பத்தின் கீழ் தான் குழி முயல்களும் (Rabbits) வகைப்படுத்தப்பட்டுள்ளன. முயல்கள் அளவு மற்றும் வடிவத்தில் குழிமுயல்களை விட பெரியவையாக உள்ளன. ஒரே விதமான உணவை உண்கின்றன. முயல்கள் பொதுவாக தாவர உண்ணிகளாகவும் மற்றும் நீண்ட காதுகளை உடையவையாகவும், வேகமாக ஓடக்கூடியவையாகவும் உள்ளன. இவை வழக்கமாக தனியாகவோ அல்லது இரண்டு முயல்களாகச் சேர்ந்தோ வாழ்கின்றன. முயல் இனங்கள் ஆப்பிரிக்கா, யுரேசியா, வட அமெரிக்கா மற்றும் சப்பானியத் தீவுக் கூட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை.
"முயல்" என்ற சொல்லைத் தங்கள் பெயரில் கொண்டுள்ள ஐந்து லெபோரிடேக் குடும்ப உயிரினங்கள் உண்மையான முயல்களாகக் கருதப்படுவதில்லை: ஹிஸ்பிட் முயல் (Caprolagus hispidus) மற்றும் நான்கு இனச் சிவப்புப் பாறை முயல்கள் (புரோனோலகுஸ் (Pronolagus) பேரினம்). அதேநேரத்தில், கழுதை குழிமுயல்கள் (Jackrabbits) எனப்படுபவை முயல்கள் ஆகும், குழிமுயல்கள் அல்ல.
ஒரு வயதுக்கும் குறைவான முயல் ஆங்கிலத்தில் லெவெரெட் (leveret) என்று அழைக்கப்படுகிறது. பல முயல்கள் சேர்ந்த ஒரு கூட்டம் ஆங்கிலத்தில் "ட்ரோவ்" (drove) என்று அழைக்கப்படுகிறது.
Remove ads
உயிரியல்
முயல்கள் வேகமான விலங்குகள் ஆகும்: ஐரோப்பிய முயல் (Lepus europaeus) மணிக்கு 56 கி.மீ. (35 மைல்) வரை ஓடக் கூடியது ஆகும்.[1][2] வட அமெரிக்காவின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் காணப்படக்கூடிய ஐந்து இனங்களைச் சேர்ந்த குழிமுயல்கள் மணிக்கு 64 கி.மீ. (40 மைல்) வரை ஓடக்கூடியவையும், ஒரே தாவலில் 3 மீ (10 அடி) வரை தாவக்கூடியவையும் ஆகும்.[3]
குழி முயல்களிலிருந்து வேறுபாடுகள்

லெபோரிடே குடும்பத்தின் மற்ற இனங்கள் போல முயல்கள் தங்கள் குட்டிகளை தரைக்குக் கீழ் வளைகளில் அல்லது குழிகளில் பெற்றெடுப்பதில்லை. மாறாக, பள்ளமற்ற தாழ்வான பகுதிகள் அல்லது புற்களால் ஆன தட்டையான கூட்டின் மேல் பெற்றெடுக்கின்றன. முயல் குட்டிகளுக்கு குழிமுயல் குட்டிகளைப் போல் குழிகள் அல்லது வளைகளால் ஏற்படுத்தப்படும் பாதுகாப்புக் கிடைப்பதில்லை. மாறாக இயற்கையானது முயல் குட்டிகளுக்கு பிறக்கும்போதே உரோமத்தையும், திறந்த கண்களையும் கொடுத்துள்ளது. இவற்றால் பிறந்தவுடன் தன்னிச்சையாக இருக்கவும், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் முடியும். மாறாகக் குழிமுயல் குட்டிகள் மற்றும் பஞ்சுவால் குழிமுயல் குட்டிகள் கண்பார்வையற்று, உரோமமின்றிப் பிறக்கின்றன.[4]
அனைத்துக் குழிமுயல்களும் (பஞ்சுவால் குழிமுயல்களைத் தவிர) நிலத்தினடியில் குழிகள் அல்லது வளைகளில் வாழ்கின்றன. அதேநேரத்தில் முயல்கள் (மற்றும் பஞ்சுவால் குழிமுயல்கள்) தரையின் மேலே உள்ள எளிய கூடுகளில் வாழ்கின்றன. இவை பொதுவாகக் கூட்டமாக வாழ்வதில்லை. முயல்கள் பொதுவாகக் குழிமுயல்களை விடப் பெரியவை ஆகும். மேலும் குழிமுயல்களைவிட நீண்ட காதுகளைப் பெற்றுள்ளன. முயல்களின் உரோமத்தில் கறுப்பு அடையாளங்கள் காணப்படுகின்றன. முயல்கள் கொல்லைப்படுத்தப்படவில்லை, ஆனால் குழி முயல்கள் வீடுகளில் வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. "பெல்ஜிய முயல்" என்று அழைக்கப்படும் வளர்ப்பு முயலானது குழிமுயல் ஆகும். இது முயலைப் போன்றே இருப்பதற்காகத் தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறையால் உருவாக்கப்பட்டது ஆகும்.[5]
முயல்கள் இணைந்த அல்லது இயங்கக் கூடிய மண்டையோடுகளைக் கொண்டுள்ளன. இது பாலூட்டிகளிலேயே ஒரு தனித்துவமானது ஆகும். முயல்கள் 48 நிறப்புரிகளைக் கொண்டுள்ளன, அதேநேரத்தில் குழிமுயல்கள் 44 நிறப்புரிகளைக் கொண்டுள்ளன.
வகைப்படுத்தல்
முயல்களில் பட்டியலிடப்பட்டுள்ள 32 இனங்கள் உள்ளன. அவை



- பேரினம் லெபுஸ் (Lepus)[6]
- துணைப்பேரினம் மக்ரோடோலகுஸ் (Macrotolagus)
- மறிமான் குழிமுயல், Lepus alleni
- துணைப்பேரினம் போயேசிலோலகுஸ் (Poecilolagus)
- பனிக்காலணி முயல், Lepus americanus
- துணைப்பேரினம் லெபுஸ் (Lepus)
- ஆர்க்டிக் முயல், Lepus arcticus
- அலாஸ்கா முயல், Lepus othus
- மலை முயல், Lepus timidus
- துணைப்பேரினம் ப்ரோயேயுலகுஸ் (Proeulagus)
- கருப்பு வால் குழிமுயல், Lepus californicus
- வெள்ளைக் குழிமுயல், Lepus callotis
- முனை முயல், Lepus capensis
- டெகுவான்டிபெக் குழிமுயல், Lepus flavigularis
- கருப்பு குழிமுயல், Lepus insularis
- துடை முயல், Lepus saxatilis
- பாலைவன முயல், Lepus tibetanus
- டொலை முயல், Lepus tolai
- துணைப்பேரினம் ஐலகோஸ் (Eulagos)
- துடைப்ப முயல், Lepus castroviejoi
- யுன்னான் முயல், Lepus comus
- கொரிய முயல், Lepus coreanus
- கோர்சிகா முயல், Lepus corsicanus
- ஐரோப்பிய முயல், Lepus europaeus
- கிரானடா முயல், Lepus granatensis
- மஞ்சூரிய முயல், Lepus mandschuricus
- கம்பளி குழிமுயல், Lepus oiostolus
- எத்தியோப்பிய உயர்நில முயல், Lepus starcki
- வெள்ளை வால் குழிமுயல், Lepus townsendii
- துணைப்பேரினம் சபனலகுஸ் (Sabanalagus)
- எத்தியோப்பிய முயல், Lepus fagani
- ஆப்பிரிக்க சவானா முயல், Lepus microtis
- துணைப்பேரினம் இன்டோலகுஸ் (Indolagus)
- அய்னான் முயல், Lepus hainanus
- இந்திய முயல், Lepus nigricollis
- பருமிய முயல், Lepus peguensis
- துணைப்பேரினம் சினோலகுஸ் (Sinolagus)
- சீன முயல், Lepus sinensis
- துணைப்பேரினம் டரிமோலகுஸ் (Tarimolagus)
- எர்கந்து முயல், Lepus yarkandensis
- வகைப்படுத்தப்படாதது
- ஜப்பானிய முயல், Lepus brachyurus
- அபிசீனிய முயல், Lepus habessinicus
- துணைப்பேரினம் மக்ரோடோலகுஸ் (Macrotolagus)
Remove ads
நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புராணங்களில்
ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைகளில் முயல்கள் ஏமாற்றும் குணம் கொண்டவையாகக் கூறப்படுகின்றன. இந்தக் கதைகள் அமெரிக்காவில் இருந்த ஆப்பிரிக்க அடிமைகள் இடையேயும் கூறப்பட்டன. இக்கதைகளே பிரெர் குழிமுயல் கதைகள் எனப்படும் கதைகளுக்கு அடிப்படையாகும்.
சீனா, சப்பான் மற்றும் மெக்சிகோ உட்பட பல நாடுகளின் கலாச்சாரங்களில் நிலவின் கருப்புப் பகுதிகள் ஒரு முயலாகக் கருதப்படுகின்றன. லெபுஸ் விண்மீன் கூட்டமும் ஒரு முயலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
ஐரோப்பியப் பாரம்பரியத்தில், முயல் இரு குணங்களான வேகம்[7] மற்றும் துணிவின்மையைக்[8] குறிக்கிறது. மேற்குறிப்பிட்ட இரண்டாவது குணத்தின் காரணமாக ஐரோப்பிய முயலானது லின்னேயப் பெயரான (உயிரியல் பெயர்) லெபுஸ் டிமிடஸைப் (Lepus timidus)[9] பெற்றது. ஆனால் அப்பெயர் இப்போது மலை முயலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பல பண்டைய கட்டுக்கதைகள் முயல்கள் ஓட்டமெடுப்பதைப் பற்றிக் கூறுகின்றன; முயல்கள் மற்றும் தவளைகள் எனும் கதையில் தங்களைவிட துணிவற்ற, தங்களிடம் பயப்படும் ஒரு உயிரினத்தைக் காணும் வரை அவை மொத்தமாகத் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பதாகக் கூடக் கூறப்படுகிறது. மாறாக, ஈசாப்பின் நீதிக்கதைகளில் நன்கு அறியப்பட்ட ஆமை மற்றும் முயல் கதையில் முயலானது தன் வேகத்தின் மீது வைத்த அபரிமிதமான நம்பிக்கையின் காரணமாக ஓட்டப்பந்தயத்தில் தோற்கிறது. அயர்லாந்து நாட்டுப்புறக் கதைகளில் முயலானது பெரும்பாலும் சித் (தேவதை) அல்லது மற்ற சிறு மதக் கடவுள்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்தக் கதைகளில், முயல்களுக்குத் தீங்கு செய்யும் கதாபாத்திரங்களுக்குப் பெரும்பாலும் பயங்கரமான விளைவுகள் ஏற்படுகின்றன.
Remove ads
மேலும் காண்க
உசாத்துணை
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads