வேம்பு

தாவர இனம் From Wikipedia, the free encyclopedia

வேம்பு
Remove ads

வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூவில் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். வேப்ப எண்ணெய் மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது.

விரைவான உண்மைகள் வேம்பு, உயிரியல் வகைப்பாடு ...
Thumb
வேம்பின் காய்கள்
Thumb
வேப்ப மரம்
Remove ads

காப்புரிமை

1995ல் யுரோப்பிய காப்புரிமைக் கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கப்பட்ட இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. கிபி 2000 ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக் கழகம் தீர்ப்பளித்தது.

வேப்பம் மலர்

  • வேம்பு, வேப்பம் பூவைக் குறிக்கும். பாண்டிய வேந்தரின் குடிப்பூ வேப்பம் பூ மாலை. பாண்டியனுக்குரிய அடையாளப் பூவான வேப்பம் பூவைப் புகழ்வது வேம்பு என்னும் துறை.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads