வேளாங்கண்ணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேளாங்கண்ணி (Velankanni), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், கீழ்வேளூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், சிறப்புநிலை பேரூராட்சியும் ஆகும். இங்கு வேளாங்கண்ணி இரஜதகிரீசுவரர் கோயில் மற்றும் தூய ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. வேளாங்கண்ணி நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
அமைவிடம்
நாகப்பட்டினத்திற்கு தெற்கில் 13 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாங்கண்னி அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
15 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2753 வீடுகளும், 11,108 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்
வேளாங்கண்ணி தமிழகத்திலும் இந்திய நாட்டிலும் தலைசிறந்த கத்தோலிக்க திருத்தலமாக விளங்குகிறது. அன்னை மரியா காட்சி கொடுத்த இடத்தில் கட்டப்பட்டுள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. எல்லாச் சமயங்களைச் சேர்ந்த திருப்பயணிகளும் அங்குச் சென்று, அன்னை மரியாவுக்குப் பொருத்தனைகள் செலுத்தி, காணிக்கைகள் அளித்து, செபங்கள் ஒப்புக்கொடுக்கிறார்கள். நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வோர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவது கண்டு நன்றிக் காணிக்கைகளும் வழங்குகிறார்கள்.
Remove ads
படத் தொகுப்பு
- வேளாங்கண்ணி பேராலயம் - முன் தோற்றம்
- வேளாங்கண்ணி பேராலயம் - நீட்சி - முன் தோற்றம்
- வேளாங்கண்ணி மாதாக் குளம்
- வேளாங்கண்ணி - ஆராதனை இல்லம்
- வேளாங்கண்ணி பேராலயம்
- நடுத்திட்டில் அமைந்த சிற்றாலயம் - அன்னையின் முதல் காட்சி நிகழ்ந்த இடம்
- வேளாங்கண்ணி - புனித செபஸ்தியார் ஆலயம்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads