வே. மணிகண்டன் (ஒளிப்பதிவாளர்)
இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வே.மணிகண்டன் (V. Manikandan, பிறப்பு: ஜனவரி 1968) இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களுள் ஒருவர். தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சார்ந்தவர். இவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட தட்டி விளம்பர ஓவியரான வேலாயுதம் பிள்ளையின் மகனாவார். இவர் புகழ்பெற்ற ஓவியர் ஜீவாவின் தம்பி ஆவார். பெரும் வெற்றி பெற்ற தமிழ், மலையாளம் மற்றும்இந்தித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். 3,000 அதிகமான விளம்பரப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். அந்நியன் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றுள்ளார். இவர் 1994 ஆம் ஆண்டு அதர்மம் திரைப்படத்தில் தனது முதல் திரைப்பட ஒளிப்பதிவைச் செய்தார். திரைப்படத்துறையின் மணிரத்தினம் மற்றும் சங்கர் போன்றோரால் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர் என பாராட்டப்பட்டவர். ஆசிய பசிபிக் சினிமா விருதை ரா.வன் திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார்.
Remove ads
விருதுகள்
பிலிம்பேர் விருது
- சிறந்த ஒளிப்பதிவாளர் விருது (அந்நியன் 2005)
- சிறந்த ஒளிப்பதிவாளர் விருதிற்கான பரிந்துரை (ஓம் ஷாந்தி ஓம் 2007)
அஸ்பரா விருது
- சிறந்த ஒளிப்பதிவாளர் விருது (ராவண் 2011)
சர்வதேச விருது
- ஏசியா பசிபிக் சினி அவார்ட்ஸ்(ASPA)
- சிறந்த ஒளிப்பதிவாளர் விருதிற்கான பரிந்துரை (ராவண் 2010)
ஐரோப்பிய பாலிவுட் விருதுகள்
- சிறந்த ஒளிப்பதிவாளர் விருது (ரா ஒன் 2012)
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads