அந்நியன் (திரைப்படம்)

சங்கர் இயக்கத்தில் 2005 -ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

அந்நியன் (திரைப்படம்)
Remove ads

அந்நியன் (Anniyan) 2005 சங்கரின் தயாரிப்பில் பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆரம்பத்திலும் பின்னர் பிரெஞ்சு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இதுவே பிரஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரான்சில் திரையிடப்பட்ட முதலாவது இந்தியத் திரைப்படமாகும். இது பன்மனோபாவ ஒழுங்கின்மை நோயினை மையமாகக் கொண்ட கதையாகும்.[1]

விரைவான உண்மைகள் அந்நியன், இயக்கம் ...

இந்தத் திரைப்படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சதா மற்றும் விவேக் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 26.38 கோடி ரூபாய் ($6 மில்லியன்) செலவில் உருவாக்கப்பட்டது.

Remove ads

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

அந்நியன் திரைக்கதையானது ஓர் அப்பாவி வக்கீலான அம்பி (இராமானுஜம் ஐயங்கார்) பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் வருந்துகின்றார். அம்பி (விக்ரம்) ஓர் நேர்மையான வக்கீல். இவர் யாராவது சட்டத்தை மீறினால் சட்டப்படி வழக்குப் தொடர்வார். எனினும் முயற்சிகள் எல்லாமே விழலுக்கிறைத்த நீராகவே முடிவடைந்தன.

இவரது தொடர்ச்சியான நேர்மை, நியாயம் போன்ற கொள்ளைகள் அந்நியன் என்ற குணாதியசத்தை ஏற்படுத்தியது. இது பின்னர் வளர்ச்சியடைந்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிய www.aniyan.com என்ற ஓர் இணையத்தளத்தையும் உருவாக்குகின்றார். அம்பியில் ஒளிந்திருக்கும் அந்நியன் ஓர் ஆக்ரோசமான குணாதியசம். சட்டங்களை மீறும் பொதுமக்களின் முறைப்பாடுகளை அம்பி அந்நியன் இணையத் தளத்தில் பதிகின்றார். பின்னர் அந்நியனாக மாறித் தண்டிக்கின்றார். அந்நியன் கருட புராணத்தின் படி தண்டனைகளை நிறைவேற்றுகின்றார்.

படத்தின் முதலரைவாசியில் மூன்று கொலைகளை நிகழ்த்துகின்றார். விபத்தின் போது காரை நிறுத்தாதல் ஓர் பாதசாரி மரணமடைகின்றார். இக்கொலையை கருடபுராணத்தில் உள்ளபடி அந்தகூபம் என்ற முறையில் தண்டிக்கின்றார். இரயிலில் தரமற்ற உணவைப் பரிமாறியதற்காக உணவைத் தயாரிப்பதற்குப் பொறுப்பானவரை பொரியல் போன்று எரிகின்ற எண்ணைத் தாச்சிக்குள் போட்டு எடுக்கின்றார். இதைக் கருட புராணத்தின் படி கூம்பிபாகம் முறையில் தண்டிக்கப் படுகின்றார். இவர் காவற்துறை (பொலீஸ்) பிரபாகர் (பிரகாஷ் ராஜ்) சகோதரர் ஆவர். கோபத்தில் இவர் கொலையாளியை கண்டுபிடித்துக் கொலைசெய்வதாகச் சூழுரைக்கின்றார். மோட்டார் சைக்கிளின் பிரேக் வயர் சரியாகச் செயற்படாததால் பாதையோரத்தில் விழும் அம்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயல்கின்றார். பின்னர் அந்நியனாகி இரத்தைக் குடிக்கும் அட்டைகளை விட்டுக் கொலையை நிகழ்த்துகின்றான்.

காவற்துறை அதிகாரியான பிரபாகரும் சாரியும் (விவேக்) கொலைகளைப் பற்றிப் புலனாய்வுகளில் ஈடுபட்டுவருகின்றனர். அம்பி அயலவாராகிய நந்தினியை (சதா) விரும்புகின்றார். எனினும் ஒரே சட்டம் சட்டம் என்று பேசும் அம்பியின் விருப்பதை மறுக்கின்றார். பின்னர் சதாவிரும்பும் ஓர் ரெமோ குணாதியத்தைப் பெறுகின்றார்.

பின்னர் நந்தினி ஓர் தொகை நிலத்தை கிரையம் செய்கிறா். இதை அரசாங்கத்தில் பதியும் போது வரிகட்டவேண்டும் என்பதால் விலையைக் குறைத்து மதிப்பிடுகின்றாள். இதற்கு அம்பி உடன்பட மறுக்கின்றார். பின்னர் ரேமோவிடம் இதைக்கூற அந்நியனாக அம்பியைப் பிந்தொடர்கின்றார் ஆவேசத்தில் அம்பியை நெருப்புக்குள் தள்ளமுயலும் போது மீண்டும் அம்பியாக மாற்றமடைகின்றார். அம்பி வைதியசாலையில் மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுகின்றார். அங்கே பிறவாளுமைக் குறைபாடு இருப்பது தெரியவருகின்றது. வைதியரோ அம்பியின் காதலை ஏற்றால் ரேமோ குணாதிசயம் மறைந்து விடும் என்கின்றார் ஆனால் அந்நியன் குணாதியசம் மறைவதற்கு நாடே திருந்த வேண்டும் என்கின்றார். நந்தினி அம்பியின் காதலை ஏற்க ரெமோ குணாதிசயம் மறைகின்றது.

கைப்பற்றப்படும் அந்நியனுக்கு இருவருட உளவியல் மருத்துவச்சிகிச்சை அளிக்கப்படுகின்றது இக்காலப் பகுதியில் குணமடைந்தால் விடுவிக்கப்படலாமென்று நீதிமன்று தீர்ப்பளிக்கின்றது. பின்னர் விடுதலையடைந்து இரயிலில் நந்தினியுடன் பிரயாணிக்கும்போது ஒருவர் பெண்கள் முன்னர் மதுவருந்துகின்றார். அவருக்கு தண்டனையாக இரயிலில் இருந்து வீசி விடுகின்றான். எனினும் இதை நந்தினியிடமிருந்து மறைக்கின்றார்.

Remove ads

விருதுகள்

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

நூல் பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads