வைஷ்ணவ நம்பி மற்றும் திருக்குறுங்குடிவல்லி நாச்சியார் கோவில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் என்பது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் என்றும் தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார்.[1]
Remove ads
தலச்சிறப்பு
மூலவர் நம்பிராயரின் வலது புறத்தில் அருகில் நின்றான் என்ற பெயரில் சிவபெருமான் சன்னதி அமைந்திருப்பது இத்தலத்தின் மிகச்சிறப்பம்சமாகும். நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் இக்கோயிலில் காட்சி தருகிறார்.
பெயர்க்காரணம்
வராக அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது அச்சந்தரும் வராக உருவத்தை குறுகச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி ஆனது.
சிவன் சன்னதி இடிப்பு சர்ச்சை
இந்தக் கோயிலில் நின்ற, இருந்த, கிடந்த என மூன்று கோலங்களில் பெருமாள் சந்திதிகள் உள்ளன. அந்த கோலத்தில் உள்ள பெருமாள்களை நின்ற நம்பி, வீற்றிருந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி என்று அழைக்கின்றனர். இதில் வீற்றிருந்த நம்பி சந்திதிக்கு எதிரில் பக்கம் நின்ற பிரான் அலது மகேந்திரகிரிநாதர் என்ற பெயரில் சிவன் தனி கொண்டுள்ளார்.[2] இங்குள்ள சிவன் சன்னதி சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக இருந்தது. ஆனால் அந்த சந்திதி 2004 சூன் மாதம் இடிக்கப்பட்டு அதில் இருந்த இலிங்கம் பெயர்த்து எடுத்து வெளியே வைக்கபட்டது. சிவன் சந்நிதி இடிக்கபட்டதை எதிர்த்து சிவனடியார்களால் நாங்குநேரி முனிசிப் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2006 ஆண்டு சிவன் சந்நிதி அகற்றப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது. இதை எதிரத்து வள்ளியூர் நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகத்தால் மேல் முறையீடு செய்யப்பட்டது. வள்ளியூர் நீதின்றம் நாங்குநேரி நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்தது. இதனையடுத்து சிவனடியார்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தனர். விசாரணைக்குப் பின்னர் சிவன் சன்னதியை அகற்றியது செல்லாது என்றும் மூன்று மாதங்களுக்குள் மீன்டும் சிவன் சன்நதியை அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று உயர் நீதிமன்றக் கிளை 2010 இல் உத்தரவு இட்டது.[3] வழக்கின் போது இந்து சமய அற நிலையத்துறை முன்னுக்குப் பின் முரணாக நீதிமன்றத்தில் நடந்துகொண்டது சர்ச்சையை உருவாக்கியது.[4]
அமைவிடம்

நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பணகுடியிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் வள்ளியூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
தீர்த்தம்

நம்பியாற்றின் கரையில் அமைந்திருக்கும் இத்தலத்தின் தீர்த்தம் திருப்பாற்கடல்.
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads