நாங்குநேரி
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாங்குநேரி (ஆங்கிலம்:Nanguneri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இவ்வூர் வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம், பூலோக வைகுண்டம் என்றும் அறியப்படுகிறது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இந்த திவ்ய தேசத்தை சிரிவரமங்கை நகர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Remove ads
அருகமைந்த ஊர்கள்
நாங்குநேரி பேரூராட்சிக்கு கிழக்கே திசையன்விளை (25 கி.மீ.); மேற்கில் களக்காடு (16 கி.மீ.); வடக்கே திருநெல்வேலி (29 கி.மீ.); தெற்கே வள்ளியூர் (13 கி.மீ.) தொலைவிலும் உள்ளது. நாங்குநேரி அருகில் (2 கி.மீ.) தொலைவில் மறுகால் குறிச்சி உள்ளது. நாங்குநேரியின் தென் பகுதியில் மஞ்சங்குளம் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
17.28 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 66 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4][5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1753 வீடுகளும், 6640 மக்கள்தொகையும் கொண்டது.[6][7][8]
கோயில்கள்
நாங்குநேரி பொருளாதார மண்டலம்
நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடம் இப்பொருளாதார மண்டலத்திற்காக 2000 ஏக்கர் பரப்பளவிலான மடத்திற்குச் சொந்தமான நிலத்தை அரசுக்குத் தந்தது.[9][10] இங்கு அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலமான நாங்குநேரி பலதுறை சார்ந்த உயர் தொழில் நுட்ப பூங்கா திட்டம் அமைக்கப்பட்டும், அரசால் செயல்படுத்தப்படவில்லை.[11][12]
ஊர் பெயர் காரணம்
ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரிஎனவும், அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.[13]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8.48°N 77.67°E ஆகும்.[14] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 141 மீட்டர் (462 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads