சிரேயா சரன்
இந்திய திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிரேயா சரன் (ஆங்கலம்: Shreya Saran) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார். இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.
மார்ச்சு 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.[3] இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.[4]
Remove ads
இளமை
சிரேயா சரண் பட்நாகர் ஒரு காயசுதா குடும்பத்தில்[5] 11 செப்டம்பர் 1982 அன்று[6][7] உத்தரப்பிரதேசம் அரித்துவாரில்,[6] (இப்போது உத்தராகண்டம்) பிறந்தார். இவரது பெற்றோர் புசுபேந்திர சரண் பட்நாகர் மற்றும் நீரஜா சரண் பட்நாகர். இவரது தந்தை பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மேலும் இவரது தாயார் தில்லி பொதுப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக இருந்தார்.[7] சரண் தனது தாயார் ஆசிரியராகப் பணிபுரிந்த இரண்டு பள்ளிகளிலும் படித்தார்.[8] இவருக்கு மும்பையில் வசிக்கும் அபிரூப் என்ற அண்ணன் இருக்கிறார்.[9] சரணின் தாய்மொழி இந்தி.[10]
அரித்துவாரில் உள்ள சிறிய நகரமான பாரத மிகு மின் நிறுவன குடியிருப்பில் இவரது குடும்பம் வசித்து வந்தது.[11] பின்னர் தில்லியில் உள்ள சீமாட்டி சிறீ இராம் கல்லூரியில்[7] படித்து இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[7][9]
சரண் ஒரு சிறந்த நடனக் கலைஞர். இவர் முதலில் தனது தாயால் கதக் மற்றும் ராஜஸ்தானி நாட்டுப்புற நடனத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் ஷோவனா நாராயணனால் கதக் பாணியில் பயிற்சி பெற்றார்.[12] கல்லூரியில் பல நடனக் குழுக்களில் பங்கேற்றார். இவர்கள் தங்கள் நடன நடைமுறைகளில் சமூக பிரச்சினைகளை இணைத்துக்கொண்டனர்.[8]
Remove ads
படங்கள்
Remove ads
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads