சிவாஜி (திரைப்படம்)

ஷங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

சிவாஜி (திரைப்படம்)
Remove ads

சிவாஜி (Sivaji: The Boss), 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.[9] இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சிறப்பம்சமாகும். இப்படத்தில் மணிவண்ணன், விவேக் முக்கிய பாத்திரங்களிலும் நயன்தாரா, மற்றும் இயக்குநர் ஷங்கரும் இத்திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறுபட்ட காலதாமத்திற்குப் பின்னர் உலகளாவிய ரீதியாக 15 ஜூன் 2007 திரையரையங்குகளில் வெளிவிடப்பட்டுள்ளது. இப்படம் 2005-ல் வெளியான சந்திரமுகி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. [சான்று தேவை]

விரைவான உண்மைகள் சிவாஜி, இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

சிவாஜி என்பவர் மென்பொருள் கட்டுமான அமைப்பாளர், ஐக்கிய மாகாணங்களில் தன்னுடைய பணியை முடித்துவிட்டு இந்தியா திரும்புகிறார். இங்குள்ள சமுதாயத்திற்கு மருத்துவம் மற்றும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற தன்னுடைய கனவை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார். இந்நிலையில் அதிகாரத்திலுள்ள பெருமுதலாளி ஆதிசேஷன் என்பவர் இவருடைய திட்டத்தை முடக்கி விடுகிறார். சிவாஜி எந்த வழியும் இல்லாமல் இருக்கிறார். ஆனால் தன்னுடைய வழியில் அவனுடைய திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார்.

Remove ads

நடிகர்கள்

Remove ads

பட உருவாக்கம்

பெரிதும் பேசப்பட்ட 1994 இல் வெளிவந்த காதலன் படத்தை இயங்கிய ஷங்கர் சன் டிவி பேட்டியில்[16] தனது விருப்பம் தமிழ் நாட்டின் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்துத் திரைப்படம் தயாரிப்பதாகும். ஷங்கரின் அடுத்த திரைப்படம் இந்தியன் பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் மற்றும் நெடுமுடி வேணு முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க ஊர்மிளா மடோண்த்கர் மற்றும் மனிஷா கொய்ராலாவும் நடித்தனர். இப்படத்தின் வெற்றியினால் பெரிதும் கவரப்பட்ட ரஜினி ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கத் தனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தார். எவ்வாறெனினும் அடுத்தாக பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஜீன்ஸ் தமிழிலும் இந்தியிலும் வெளிவந்து வெற்றியளித்தது.[17]

ஜீன்ஸ் படத்தை அடுத்த ரஜினிகாந்தை ஷங்கர் ஓர் திரைக்கதையுடன் அணுகினார். எனினும் ரஜனிகாந்த் கே. எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட படையப்பா திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தமையால் நேரக்குறைவுகாரணமாக ஒத்துக்கொள்ளவில்லை. இது பின்னர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்த முதல்வன் திரைப்படமாக ஆக வெளிவந்தது.[18] இத்திரைபடத்தை அடுத்து பாய்ஸ், அந்நியன் திரைப்படங்கள் வெளிவந்து பெருவெற்றி பெற்றது. நடிகர்களான சிரஞ்சீவி, சல்மான் கான் மற்றும் விஜய் இவரது வழிகாட்டிலில் நடிக்க விருப்பத்தை தெரிவித்திருந்தாலும் அவரசப்பட்டு எந்த ஒரு திரைப்படத்திலும் ஒப்பமிட்டு துவக்கவில்லை.

அக்டோபர் 2005 இல் தமிழ் சினிமாவில் மிகப்பழையதும் பெரியதுமான ஏவிஎம் புரொடக்ஷனை நடத்திவரும் எம். எஸ். குகன் மற்றும் எம். சரவணன் சங்கரை அணுகிப் படமொன்றை தங்களின் ஸ்ரூடியோவில் தயாரித்துத் தரும்படி கேட்டபோது சங்கர் அதற்கு ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தில் இந்திய சினிமாவில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும்[19] சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தில் நடிப்பதாக ஒப்பமிட்டுச் சம்மதித்தார். தமிழ் சினிமாவில் சந்திரமுகி வெற்றியடைந்ததை அடுத்து சினிமா வாய்ப்புக்கள் கிடைத்தபோதிலும் அதை ஏற்றுக் கொண்டு நடிக்கவில்லை. சிவாஜி ராவ் கெய்க்வாட் கே. பாலசந்தர் திரையுலகில் அறிமுகம் செய்தபோது ரஜினிகாந்த் என அறிமுகப்படுத்தினார். இவரது இயற்பெயராகும் இதனையும் தி பாஸ் என்பதையும் சேர்து சிவாஜி தி பாஸ் என்றவாறு திரைப்படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

பாடல்கள்

விரைவான உண்மைகள் சிவாஜி: திரைப்பாடல்கள், திரைப்பாடல்கள் ஏ. ஆர். ரகுமான் ...

சிவாஜி: த பாஸ் திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஏப்ரல் 2, 2007ல் இவற்றின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு ஒரு சில நாட்கள் முன்னரே இப்பாடல்கள் இணையத்தில் திருட்டுத்தனமாகப் பதிவிறக்கக் கிடைத்தது.[20]

வரிசைபாடல்பாடகர்கள்படமாக்கம்நீளம் (நி:நொ)எழுதியதுகுறிப்பு
1பல்லேலக்காஎஸ்.பி பாலசுப்பிரமணியம், ஏ. ஆர். ரைஹானா, பெனி தயாள்6.08நா. முத்துக்குமார்
2ஸ்டைல்பிளாஸ், தன்வீ, ராக்ஸ், சுரேஷ் பீட்டர்ஸ்5.13பா. விஜய்முன்னர் "ஒரு கூடை சன்லைட்". சுரேஷ் பீட்டர்ஸ் பாடிய பாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 வாஜி வாஜிஹரிஹரன், மதுஸ்ரீ5.49வைரமுத்து
4அதிரடிஏ.ஆர்.ரகுமான், சயோனரா5.47வாலி
5சகானாஉதித் நாராயண், சின்மயி5.21வைரமுத்துசின்மயிக்குப் பதிலாக சுஜாதா பாடிய பாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6த பொஸ்நரேஷ் ஐயர், பிளாஸ், ரகுயீப் அலாம்3.20நா. முத்துக்குமார், பிளாஸ்
7சகாராவிஜய் யேசுதாஸ், கோமதிஸ்ரீ4.32வைரமுத்து
Remove ads

விருதுகள்

2007 தேசிய திரைப்பட விருதுகள்[21]
  • வென்றது – சிறந்த சிறப்பு விளைவுகளுக்கான வெள்ளி தாமரை விருது – எம்.எஸ்.  இந்திய கலைஞர்கள், சென்னை
2008 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்[சான்று தேவை]
  • வென்றது – சிறந்த இசை அமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது  ஏ. ஆர். ரகுமான்
  • வென்றது – சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பிலிம்பேர் விருது கே. வி. ஆனந்த்
  • வென்றது – பிலிம்பேர் சிறந்த கலை இயக்குநர் விருது தோட்டா தரணி
  • பரிந்துரைக்கப்பட்டது – சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது இரசினிகாந்து
  • பரிந்துரைக்கப்பட்டது – சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது சிவாஜி
  • பரிந்துரைக்கப்பட்டது – சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது சின்மயி
2007 விஜய் விருதுகள்[22]
2007 தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்[23]
Remove ads

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "எல்லாம் இழந்து... பின்பாதியில் அனைத்தையும் அடையும் அண்ணா மலை, படையப்பா பாணி கதை. முழுக்க முழுக்க ரசிகர்களைக் குறிவைத்து ஷங்கர் விட்டிருக்கும் ரஜினி ராக்கெட்!... ரஜினியைப் பொறுத்தவரை, தனக்குக் கிடைத்த வாய்ப்பில் மற்றுமொரு முறை தன்னை நிரூபித்துவிட்டார். ஷங்கருக்குத்தான் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!" என்று எழுதி 41/100 மதிப்பெண்களை வழங்கினர்.[24]

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

  1. தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் படி 600 மில்லியன்,[1] தி டெலகிராப் மதிப்பீட்டின் படி 80 கோடி,[2] இந்தியா டுடே மதிப்பீட்டின் படி 890 மில்லியன்.[3]

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads