ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்

From Wikipedia, the free encyclopedia

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்
Remove ads

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஆவார்.[1] முன்னைய அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவர் சிம்மாசனம் ஏறினார். கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கு 1803, 1809 ஆண்டுகளில் பிரித்தானிய எதிர்ப்புகள் இன்றிக் கண்டிக்குள் நுழைந்தனர் எனினும், அரசுப்படைகள் பிரித்தானியப் படைகளைத் போரிட்ட வெற்றி பெற்றார். பல்வேறு சதித்திட்டங்களால் இறுதியாக போரில் வீழ்த்தப்பட்டார். இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவர் சிறை பிடிக்கப்பட்டார்.[2]

விரைவான உண்மைகள் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன், ஆட்சி ...

இவர் மதுரை நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவார்.[3] இவர் முதலில் கண்டி நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனின் மருமகன் ஆவார்.[4]

Remove ads

அரசுரிமைப் போட்டி

எனினும், ராஜாதி ராஜசிங்கனின் வாரிசு உரிமைக்காக அரசியின் தம்பியும் போட்டியிட்டார். உண்மையில் அவருக்கே கூடிய உரிமை இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், கண்டியரசின் பிரதம பிரதானியான பிலிமத்தலாவ இவரையே அரசனாக்கினர். கண்டி அரசராக பதவியேற்ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பல சதி முயற்சிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவரது ஆட்சிக்காலத்தில் அன்னிய ஆங்கிலேயர்கள் வாணிபம் செய்வதோடு ஆட்சியையும் பிடிக்க பல்வேறு சதித்திட்டம் செய்யப்பட்டு இறுதியாக மெதமகாநுவரவில் தலைமறைவாக இருக்கையில் பிரித்தானிய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Remove ads

உள் முரண்பாடுகள்

பிலிமத்தலாவயின் சதித்திட்டம்

இவரது ஆட்சி காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிய பிரித்தானியர், கண்டி அரசில் தலையிடவில்லை. ஆனால், பிலிமத்தயாவோ பிரித்தானியருடன் மறைமுகத் தொடர்புகளை வைத்துக்கொண்டு கண்டியரசனைப் பிரித்தானியருக்கு எதிராகத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். இதனால் பிரித்தானியர் கண்டியரசைக் கைப்பற்றுவதற்கான காரணம் கிடைக்கும் என அவன் கருதினான். கரையோர மாகாணங்களில் உறுதியான நிலையில் இருந்த பிரித்தானியருடன் போரில் ஈடுபடும்படி பிலிமத்தயா ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைத் தூண்டி விட்டான். 1803 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி போர் அறிவிக்கப்பட்டது. பிரித்தானியர் எதிர்ப்புகள் இன்றிக் கண்டிக்குள் நுழைந்தனர் எனினும், அரசுப்படைகள் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்துக் கண்டியரசனை மீண்டும் பதவியில் அமர்த்தினர்.. பிலிமத்தயாவை இரண்டு முறை அரசனுக்கு எதிராகச் சதிசெய்து நாட்டைக் கவர முயன்றது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவன் மன்னிக்கப்பட்டான். மூன்றாவது தடவையும் அவன் பிடிபட்டபோது அவன் கொல்லப்பட்டான்.

எகலப்பொலையின் சதி

பிலிமத்தயாவுக்குப் பதிலாக அவனது மருமகனான எகலப்பொலை அதிகாராக நியமிக்கப்பட்டான். அவனும் தனது மாமனைப் போலவே அரசனுக்கு எதிராகச் செயற்பட்டுக் குழப்பங்களைத் தூண்டி விட்டான். இக்குழப்பங்கள் அடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எகலப்பொலை தப்பிக் கொழும்புக்கு ஓடிப் பிரித்தானியருடன் சேர்ந்து கொண்டான்.

Remove ads

கண்டி கைப்பற்றப்படல்

பிரித்தானியர் மீண்டும் 1815 பெப்ரவரி 10 ஆம் தேதி கண்டியை கைப்பற்றினர். மார்ச் 2 ஆம் திகதி என்னும் கண்டி ஒப்பந்தம் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியர்களால் பறிக்கப்பட்டது. அரசர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார். அங்கே பிரித்தானியரால் சிறை வைக்கப்பட்டார். 1832 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் காலமானார்.

வழித்தோன்றல்

சமூக சீர்திருத்தவாதியான பட்டுக்கோட்டை அழகிரி, கண்டி மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவர்.[5]

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads