தோடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தோடி அல்லது ஹனுமத்தோடி என்பது கருநாடக இசையின், எந்நேரமும் பாடக்கூடிய 8 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண பத்ததியில் 8 வது இராகத்திற்கு ஜனதோடி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1] இந்துஸ்தானி இசையில் பைரவி தாட் என்றழைக்கப்படுகிறது.[2]
இலக்கணம்

ஆரோகணம்: | ஸ ரி1 க2 ம1 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க2 ரி1 ஸ |
சிறப்பு அம்சங்கள்
- விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். பக்திச்சுவையுள்ளது.
- ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் பஞ்சமம் இல்லாமல் இசைத்தால் அதற்குச் சுத்த தோடி என்று பெயர்.
- பஞ்சம நீக்கத்துடன் (வர்ஜதுடன்) கூடிய ஜண்டை (இரட்டைச்) சுரக்கோர்வைகளும், தாட்டுச் சுரக்கோர்வைகளும் இந்த இராகத்தின் வடிவத்தைக் காட்டுகின்றன.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் பவப்பிரியா (44) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, க, ம, த, நி ஆகிய சுரங்கள் முறையே மேசகல்யாணி (65), ஹரிகாம்போஜி (28), நடபைரவி (20), சங்கராபரணம் (29), கரகரப்பிரியா (22) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன (மூர்ச்சனாகாரக மேளம்).
- 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தோடி சீதாராமய்யர் இந்த இராகத்தை 8 நாட்களாக பாடினார் என சொல்லப்படுகிறது.
Remove ads
ஜன்ய இராகங்கள்
ஹனுமத்தோடியின் ஜன்ய இராகங்கள் இவை.
தமிழ்ப்பாட்டு
இந்த இராகத்தில் அமைந்த தமிழ்பாட்டு ஒன்று கீழேத் தரப்படுகிறது. இதனை இயற்றியவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை.
இராகம்:தோடி தாளம்:ரூபகம்
பல்லவி
திருமுடி சூட்டிடுவோம்
தெய்வத் தமிழ்மொழிக்கு (திரு)
அநுபல்லவி
வருமொழிஎவர்க்கும் வாரிக்கொடுத்துதவி
வண்மைமிகுந்த்தமிழ் உண்மைஉலகறிய (திரு)
சரணங்கள்
பெற்றவளை இழந்து மற்றவரைத் தொழுத
பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை
உற்றஅரசிழந்துஉரிமை பெருமை குன்றி
உள்ளம்வருந்தின தால்பிள்ளைகள் சீர்குலைந்தோம் (திரு)
அன்னையை மீட்டும்அவள் அரியனை மீதிருத்தி
அகலம் முழுவதும்அவள் மகிமை விளங்கச்செய்வோம்
முன்னைப் பெருமை வந்து இன்னும் புதுமைபெற்று
முத்தமிழ்ச் செலவியவள சித்தம் குளிர்ந்திடவே (திரு)
தாயின் மனம்குளிர்ந்தால் தவம் அதுவே நமக்கு
தாரணி தன்னில்நம்மை யாரினிமேல் இகழ்வார்
நோயும் நொடியும்விட்டு நுண்ணறி வோடுநல்ல
நூலும்கலைக ளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம் (திரு)
Remove ads
உருப்படிகள்
Remove ads
குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads