ஹிசார் மாவட்டம்

அரியானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஹிசார் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான அரியானாவின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் ஹிசாரில் உள்ளது. இந்த மாவட்டமும் ஹிசார் பிரிவின் ஒரு பகுதியாகும். இது இந்திய நிர்வாக சேவையில் பணிபுரியும் ஆணையாளரின் தலைமையிலானது.இம்மாவட்டத்தில் சிந்துவெளி நாகரிகம் காலத்திய இராக்கிகர்கி தொல்லியல் களம் உள்ளது.

1966-ஆம் ஆண்டின் மறுசீரமைப்பு வரை ஹரியானாவின் மிகப்பெரிய மாவட்டமாக காணப்பட்டது. ஹிசாரின் சில பகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்ட ஜிந்த் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டன. 1974-ஆம் ஆண்டில் தெஹ்ஸில்களான பிவானி மற்றும் லோஹாரு என்பன பிவானி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டன. சிர்சா மாவட்டத்தின் உருவாக்கத்தின் போது ஹிசார் மாவட்டம் மேலும் பிளவுப்பட்டது. பின்னர் பதேஹாபாத் மாவட்டமும் உருவாக்கப்பட்டது.[2]

ஹிசார் என்பது ஹிசார் பிரிவு பிரதேச ஆணையாளரின் ஒரு பிரதேச தலைமையகம் மற்றும் பொலிஸ் வரம்பின் தலைமையகம் ஆகும். இது பிஎஸ்எப் 3-ஆவது பிஎன், எச்ஏபி படைப் பிரிவுகளினதும், அதிரடிப் படையினரினதும் தலைமையகமாகும். இந்த அனைத்து துறைகளுக்கும் இடமளிக்கும் பொருட்டு, ஐந்து மாடி மாவட்ட நிர்வாக வளாகம் கட்டப்பட்டு 1980-ஆம் ஆண்டில் அலுவலகங்கள் மாற்றப்பட்டன. செயற்பாட்டுக்குரிய இக் கட்டிடம் புதிய நீதித்துறை வளாகத்தை ஒட்டியுள்ளது. இவை ஹரியானாவில் மிகப் பெரிய நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை வளாகங்களாகும். மேலும் நாட்டின் மிகப் பெரிய மாவட்ட தலைமையகங்களில் ஒன்றாகும்.

சரஸ்வதி பள்ளத்தாக்கு நாகரிகத்திற்கு சொந்தமான ஐந்து நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பெயர் வரலாற்று புத்தகங்களில் சிந்து நாகரிகத்தின் பின்ணனியிலும் பொது அறிவு புத்தகங்களில் ஐந்து செம்மறி பண்ணைகளில் ஒன்றான பனவாலியின் இருப்பிடமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஹரியானாவின் 21 மாவட்டங்களில், பரிதாபாத்திற்கு அடுத்தபடியாக இந்த மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது.[3]

ஜிண்டால் எஃகு தொழிற்சாலைகள் இருப்பதால் ஹிசார் எஃகு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மிகப் பெரிய கல்வனேற்றப்பட்ட இரும்பு உற்பத்தி ஆகும். [சான்று தேவை]

Remove ads

தொல்லியல் களம்

Thumb
இராக்கிகர்கி தொல்லியல் களத்தில் கிடைத்த மனித எலும்புக் கூடு, தேசிய அருங்காட்சியகம், புது டில்லி

ஹிசார் மாவட்டத்தின் மேற்கில் காக்கர் ஆற்றின் சமவெளியில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரமான இராக்கிகர்கி, சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய காலத்தின் எச்சங்களைக் கொண்டது. 80 – 105 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ராக்கிகர்கி தொல்லியல் களம், அரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தொல்லியல் களங்களை விடப் பெரியதாகும்.

சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய ராக்கிகர்கி தொல்லியல் களம் கிமு 6420 – 6230 மற்றும் கிமு 4470 – 4280 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். பின்னர் இப்பகுதியானது, கிமு 2600 – 1900களில் உச்சத்திலிருந்த சிந்துவெளி நாகரீகத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.[4] ராக்கிகர்கி தொல்லியல் களம் 105 ஹெக்டேர் நிலப்பரப்பில்[5][6] உள்ள ஏழு மலைக் குன்றுகளைக் கொண்டுள்ளது.[7]

ராக்கிகடி தொல்லியல் களத்தை 2011 முதல் டெக்கான் முதுநிலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மற்றும் அரியானா மாநில தொல்லியல் துறையும் இணைந்து தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. ராக்கி கர்கி தொல்லியல் களத்தில் கிடைத்த ஆறு தொல்பொருட்களை, 2014ல் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு பரிசோதனை செய்ததன் மூலம், இத்தொல்லியல் களம் கிமு 6420 – 6230 மற்றும் கிமு 4470 – 4280 ஆகிய இரண்டு காலங்களுக்கு இடைப்பட்டது என அறியப்பட்டுள்ளது.

Remove ads

வரலாறு

1783–84 (சாலிசா பஞ்சம்),[8]  1838 [9], 1860–61[8] ,  1896–97[10]  மற்றும் 1899–1900 [10] ஆகிய ஆண்டுகளில் இந்த மாவட்டம் பஞ்சத்தை சந்தித்தது.

புவியியல்

வடக்கு ஹிசார் மாவட்டம் ஃபத்தாபாத் மாவட்டம் வழியாக பாயும் காகர் நதிக்கும், நர்ணவுல் தெஹ்ஸில் வழியாக பாயும் த்ரிஷத்வதி ஆற்றின் பேலியோ வாய்க்காலுக்கும் இடையில் உள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு ஹிசார் மாவட்டம் த்ரிஷத்வதி நதிக்கும் யமுனாநதிக்கும் இடையில் தோவாபில் வருகிறது. மேற்கு ஹிசார் மாவட்டம் பாகர் பாதையின் ஒரு பகுதியாகும். நீர்ப்பாசன நோக்கத்திற்காக, ஹிசார் மாவட்டம் 5 வட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[11] ஹிசார் வளமான வண்டல் மண்ணைக்கொண்டிருக்கிறது. இது பாகர் பாதையில்மிகவும் ஊடுருவக்கூடிய மிகவும் மணல் பாதைகளைக் கொண்டுள்ளது. 100 அடிக்கு கீழ் மனித நுகர்வுக்கு தகுதியற்ற உவர் நீர் காணப்படுகின்றது. முன்பு ஹிசார் மழையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது மற்றும் வடக்கு ஹிசாரில் காகர் நதி பாயும் நலி பகுதியில் மட்டுமே நீர்ப்பாசனம் சாத்தியமானது. 1963 ஆம் ஆண்டில் பக்ரா நங்கல் அணை கால்வாய் அமைப்பு திறக்கப்பட்ட பின்னர், முந்தைய மேற்கு யமுனா கால்வாய் இப்போது ஹரியானாவின் மேற்கு எல்லையில் விழுந்த பாகர் பகுதி உட்பட பெரும்பாலான ஹரியானாவின் நீர்ப்பாசனம் நடைப்பெறுகின்றது.[11]

புள்ளிவிபரங்கள்

2011 ஆம் ஆண்டில சனத் தொகை கணக்கெடுப்பின் படி இந்த மாவட்டத்தில் 1,743,931 மக்கள் வசிக்கின்றனர்.[3] இது காம்பியா[12] அல்லது அமெரிக்க மாநிலமான நெப்ராஸ்காவுக்கு சமமான மக்கட்தொகையை கொண்டுள்ளது.[12]  இந்தியாவின் மொத்தம் 640 மாவட்டங்களில் 276 வது இடத்தைப் பெறுகிறது. மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்கு 438 மக்கள் அடர்த்தி (1,130 / சதுர மைல்) உள்ளது.[3] 2001–2011 காலப்பகுதியில் அதன் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 13.38% ஆகும். ஹிசார் மாவட்டத்தில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 871 பெண்கள் என்ற பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதம் 73.2% ஆகும்.[3]

Remove ads

அரசியல்

இந்த மாவட்டம் ஆதம்பூர், உக்லானா, நார்னௌந்த், ஹான்சி, பர்வாலா, ஹிசார், நல்வா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஒருவர் என்ற முறையில் மாநில சட்டமன்றத்துக்காக ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த மாவட்டம் ஹிசார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

இதனையும் காணக

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads