ஹூத்திகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹூத்திகள் (Houthis, அரபி: الحوثيون al-Ḥūthiyyūn), எனப் பொதுவாக அழைக்கப்படும் அன்சார் அல்லா (Ansar Allah, anṣār அல்லாஹ் أنصار الله "கடவுளின் ஆதரவாளர்கள்"), என்ற குழுவினர் யெமன் நாட்டில் இயங்கும் ஒரு இசுலாமிய ஆயுதக் குழுவாகும்.[10] 2004 ஆம் ஆண்டில் தீவிரவாதத்தை ஆரம்பித்த உசைன் பத்ருதீன் அல்-ஹூத்தி என்பவரின் பெயரில் இருந்து இக்குழுவினர் ஹூத்திகள் என அழைக்கப்படுகின்றனர். 2004 செப்டம்பரில் இவர் யெமன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.[11] அப்துல்-மாலிக் அல்-ஹூத்தி என்பவரின் தலைமையில் இயங்கும் இக்குழு 2014-2015 இல் யெமனில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை வெற்றிகரமாக முடித்தது. தற்போது இக்குழு யெமன் தலைநகர் சனா மற்றும் யெமனிய நாடாளுமன்றம் ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.[12] ஹூத்திகள் ஈரானிடம் இருந்து 2004 ஆம் ஆண்டு முதல் ஆயுதங்கள், நிதியுதவி, மற்றும் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads