எல்சிங்கி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எல்சிங்கி (பின்னிஷ Helsinki ஹெல்சிங்கி, ஸ்வீடிஷ் ⓘ ஹெல்சிங்போர்ஸ்), பின்லாந்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு பின்லாந்தின் பால்டிக் கடலின் பின்லாந்து வளைகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மக்கட்டொகை சுமார் 564,908 ஆகும் (31 ஜனவரி 2007 இன் படி)[1]. ஏறத்தாழ பின்லாந்தில் 10ல் ஒருவர் இந் நகரத்தில் வாழ்கின்றனர்.
ஹெல்சிங்கி மற்றும் அருகில் உள்ள நகர்களான யெஸ்ப்பூ, வன்டா மற்றும் கௌன்னியெனென் ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதி தலைநகர்ப் பகுதி ஆகும்.
Remove ads
அறிமுகம்
ஹெல்சிங்கி, வெளிநாட்டவர்களின் பின்லாந்து நுழைவு வாயில் ஆகும். 130 நாடுகளை சேர்ந்தவர்கள் ஹெல்சிங்கி நகரில் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் ரஷ்யா, எஸ்தோனியா, சுவீடன், சோமாலியா, செர்பியா, சீனா, ஈராக், ஜெர்மனி முதலான நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
ஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு தலைநகரமும் ஆகும். பல்வேறு அருங்காட்சியகங்களும் பொருட்காட்சியகங்களும் இங்கு அமைந்துள்ளது. நோர்டிக் நாடுகளில் அதிகம் வாசிக்கப்படும் செய்தித்தாளான "ஹெல்சிங்கின் சனோமட்" (Helsingin Sanomat) இந்நகரில் இருந்துதான் வெளியாகிறது.
Remove ads
வரலாறு

- 1550 இல் ஹெல்சிங்கி நகரம் குஸ்டவ் வாசா (Gustav Vasa) என்ற சுவீடிய மன்னரால் நிறுவப்பட்டது.
- 1640 இல் ஹெல்சிங்கி நகரம் வண்டா நதிக்கரையில் இருந்து தற்போதுள்ள இடதிற்கு மாற்றப்பட்டது.
- 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருசியப் படைகளால் ஹெல்சின்கி இருமுறை தற்காலிகமாக கைப்பற்றப்பட்டது, இத்தாக்குதல்களை தடுக்க பின்னர் சுவீடிஷ் ராணுவம் ஸ்வெபொர்க் (Sveaborg)(சௌமென்லின்னா) என்ற கடற்கரைக் கோட்டையை கட்டியது.
- 1809 இல் பின்லாந்தின் ஆட்சி சுவீடனிடமிருந்து ரஷியாவுக்கு கைமாறியதும், பின்னர் ரஷிய அரசாங்கம் பின்லாந்தின் தலைநகரை ஆபொ(Åbo) (டுர்க்கு-Turku) விலிருந்து ஹெல்சின்கிக்கு மாற்றியது.
- 19 ஆம் நூற்றாண்டில் ஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு மையமாகியது.
Remove ads
அரசியல்
ஹெல்சிங்கி நகர சபையில் மொத்தம் 85 உறுப்பினர்கள் உள்ளனர்.
கல்வி

- ஹெல்சின்கியில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை: 190
- உயர் பள்ளிகளின் எண்ணிக்கை: 41
- தொழிற்கல்வி நிலையங்களின் எண்ணிக்கை: 15
- பட்டையக் கல்லூரிகளின் எண்ணிக்கை: 4
- பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை: 8
பல்கலைக்கழகங்கள்
- ஹெல்சிங்கி பல்கலைக்கழகம்
- ஹெல்சிங்கி தொழினுட்பப் பல்கலைக்கழகம், யெஸ்ப்பூ
- ஹெல்சிங்கி பொருளாதாரப் பள்ளி
- சுவீடிய பொருளாதார, வர்த்தக மேளாண்மைப் பள்ளி
விழாக்கள்
- ஹெல்சின்கி விழா (The Helsinki Festival) - இது ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் நடைபெரும் கலை மற்றும் பண்பாட்டு விழா.
- வலொன் வொயிமட் (Valon Voimat "Forces of Light") - இது ஆண்டுதோறும் நடைபெறும் குளிர்கால விழா.
- வப்பு - இது ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான விழா.
புகைப்படங்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads