நோர்டிக்கு நாடுகள்
வட ஐரோப்பாவிலும் வட அத்திலாந்திக்கிலும் அமைந்துள்ள புவியியல் மற்றும் பண்பாட்டுப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நோர்டிக் நாடுகள் (Nordic countries) என்பது வட ஐரோப்பாவில் உள்ள நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய மூன்று ஸ்காண்டனேவிய நாடுளையும், அத்துடன் பின்லாந்து, ஐஸ்லாந்து, ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியதாகும். இவற்றுடன் டென்மார்க் நாட்டைச் சார்ந்த பிரதேசங்களான கிறீன்லாந்து, பரோயே தீவுகள், பின்லாந்து நாட்டை சார்ந்த ஓலாண்ட் (Åland), மற்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த சான் மேயன் தீவும் (Jan Mayen), சுவால்பாத் (Svalbard) தீவுகளும் இந்த நோர்டிக் நாடுகளின் அமைப்புக்குள் வருகின்றன.

பொதுவில் இந்த 'நோர்டிக் நாடுகள்' என்ற பெயர் பலராலும் 'ஸ்காண்டனேவிய நாடுகள்' என்ற பெயருடன் பொருத்திப் பார்க்கப்படுவதாயினும், உண்மையில் இவை வெவ்வேறாகவே இருக்கின்றன.[9].
இந்நாடுகளில் மொத்தமாக 25 மில்லியன் அல்லது 250 இலட்சத்திற்கு மேலான மக்கள் வசிக்கின்றார்கள். இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஈழத்தமிழர்கள் அண்மையில் குடியேறியுள்ளார்கள். மேலும், நோர்டிக் நாடுகள் இலங்கை இனப்பிரச்சினையில் நடுவர்களாகவும் (mediators) ஆகவும் உதவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Remove ads
அரசியல் காலவரிசை
நூற்றாண்டு | நோர்டிக் நாடுகள் | ||||||
21 | டென்மார்க் (ஐரோப்பிய ஒன்றியம்) | ஐஸ்லாந்து | நோர்வே | சுவீடன் (ஐரோப்பிய ஒன்றியம்) | பின்லாந்து (ஐரோப்பிய ஒன்றியம்) | ||
20 | டென்மார்க் | சுவீடன் | பின்லாந்து | ||||
19 | டென்மார்க் | சுவீடன் - நோர்வே ஒன்றியம் | ரஷ்யா | ||||
18 | டென்மார்க் - நோர்வே | சுவீடன் | |||||
17 | |||||||
16 | |||||||
15 | Kalmar ஒன்றியம் | ||||||
14 | டென்மார்க் | நோர்வே | சுவீடன் | ||||
13 | |||||||
12 | ஐஸ்லாந்து | நோர்வே | |||||
Folkeslag | Dansker | Islendinger | Nordmenn | Svensker | Finner |
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads