1944 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

1944 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1944 Summer Olympics) அலுவல்முறையாக பதின்மூன்றாவது ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள் (Games of the XIII Olympiad) என்றறியப்பட வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை. இது ஐக்கிய இராச்சியத்தின் இங்கிலாந்தின் இலண்டன் நகரில் நடைபெறுவதாக இருந்தது. 1939ஆம் ஆண்டு சூன் மாதம் நடந்த பன்னாட்டு ஒலிம்பிக் குழு கூட்டத்தில் உரோம், டிட்ராயிட், லோசான், ஏதென்ஸ், புடாபெஸ்ட், எல்சிங்கி, மொண்ட்ரியால் நகரங்களை தோற்கடித்து இந்த உரிமையைப் பெற்றிருந்தது.[1]

இந்தப் போட்டிகள் இரத்தானதால் இலண்டனுக்கு 1948 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு தரப்பட்டது.

போரின்னூடேயும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு தனது தலைமையகம் இருந்த லோசான், சுவிட்சர்லாந்தில் ஐம்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாட பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. 1944ஆம் ஆண்டு சூன் 17 முதல் சூன் 19 வரை நடந்த இந்தக் கொண்டாட்டத்தை தற்கால ஒலிம்பிக் தீச்சுடர் தொடர் ஓட்டத்தை அறிமுகப்படுத்திய கார்ல் தியெம் "ப.ஒ.குவின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்" எனக் குறிப்பிட்டார்.[2]

போலந்து போர்க் கைதிகள் (POWs) 1944, சூலை 23 முதல் ஆகத்து 13 வரை முறைசாரா போர்க்கைதிகள் ஒலிம்பிக் (POW Olympics) நடத்த சிறைப்பிடித்த செருமானியர்கள் அனுமதி வழங்கினர்; இதில் படுக்கை விரிப்புகளையும் வண்ணக் கழுத்துக் குட்டைகளையும் கொண்டு ஒலிம்பிக் சின்னங்களை உருவாக்கினர். இது போரையும் கடந்து ஒலிம்பிக் உணர்வு தழைத்துள்ளதற்கான சான்றாக கருதப்படுகின்றது.[3]

Remove ads

இரத்து செய்யப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads