1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

From Wikipedia, the free encyclopedia

1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
Remove ads

1975 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1975 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1975) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் உலகக் கிண்ணத்துக்கான முதலாவது போட்டியாகும். இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் அறிமுகமாகி நான்கு ஆண்டுகளின் பின் முதலாவது உலகக் கிண்ண போட்டி நடைபெற்றது. இப்போட்டிகள் 1975 சூன் 7 முதல் சூன் 21 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை, கிழக்கு ஆபிரிக்க அணியும் கலந்துகொண்டன. இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆத்திரேலிய அணியை 17 ஓட்டங்களால் வெற்றியீட்டி முதலாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது[1].

விரைவான உண்மைகள் நிர்வாகி(கள்), துடுப்பாட்ட வடிவம் ...
Remove ads

பங்கேற்ற நாடுகள்

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், மேற்கிந்தியா ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளும் இலங்கை, கிழக்கு ஆபிரிக்கா ஆகிய டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத நாடுகளும் பங்கேற்றன.

பிரிவு ஆட்டங்கள்

பிரிவு A

மேலதிகத் தகவல்கள் அணி, பு ...
7 சூன் 1975
இங்கிலாந்து  334/4 - 132/3  இந்தியாலோர்ட்ஸ் மைதானம், லண்டன்
7 சூன் 1975
நியூசிலாந்து  309/5 - 128/8 கிழக்கு ஆப்பிரிக்காபேர்மிங்காம்
11 சூன் 1975
இங்கிலாந்து  266/6 - 186  நியூசிலாந்துநொட்டிங்கம், இங்கிலாந்து
11 சூன் 1975
கிழக்கு ஆப்பிரிக்கா 120 - 123/0  இந்தியாலீட்ஸ், இங்கிலாந்து
14 சூன் 1975
இங்கிலாந்து  290/5 - 94 கிழக்கு ஆப்பிரிக்காபேர்மிங்காம்
14 சூன் 1975
இந்தியா  230 - 233/6  நியூசிலாந்துமான்செஸ்டர்

பிரிவு B

மேலதிகத் தகவல்கள் அணி, பு ...
7 சூன் 1975
ஆத்திரேலியா  278/7 - 205  பாக்கித்தான்லீட்ஸ்
7 சூன் 1975
இலங்கை  86 - 87/1  மேற்கிந்தியத் தீவுகள்மான்செஸ்டர்
11 சூன் 1975
ஆத்திரேலியா  328/5 - 276/4  இலங்கைலோர்ட்ஸ், லண்டன்
11 சூன் 1975
பாக்கித்தான்  266/7 - 267/9  மேற்கிந்தியத் தீவுகள்பேர்மிங்காம்
14 சூன் 1975
ஆத்திரேலியா  192 - 195/3  மேற்கிந்தியத் தீவுகள்ஓவல், லண்டன்
14 சூன் 1975
பாக்கித்தான்  330/6 - 138  இலங்கைநொட்டிங்கம்
Remove ads

வெளியேற்றம்

  அரை இறுதி இறுதி
             
18 சூன் - இங்கிலாந்து லீட்ஸ்
 A1 இங்கிலாந்து 93  
 B2 ஆத்திரேலியா 94/6  
 
21 June - இங்கிலாந்து லோர்ட்ஸ்
      ஆத்திரேலியா 274
    மேற்கிந்தியத் தீவுகள் 291/8
18 June - இங்கிலாந்து ஓவல்
 A2 நியூசிலாந்து 158
 B1 மேற்கிந்தியத் தீவுகள் 159/5  

அரையிறுதி

18 சூன் 1975
இங்கிலாந்து  93 - 94/6  ஆத்திரேலியாலீட்ஸ்
18 சூன் 1975
நியூசிலாந்து  158 - 159/5  மேற்கிந்தியத் தீவுகள்ஓவல், லண்டன்

இறுதிப்போட்டி

முதலாவது துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு அவுத்திரேலியா, மேற்கிந்திய அணிகள் ஆகியன தெரிவாகின. 1975 சூன் 21ம் திகதி இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் 60 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 8 விக்கட் இழப்புக்கு 291 ஓட்டங்கைளப் பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய அணியினர் 50 ஓட்டங்களைப் பெற்றபோது 3 விக்கட்டுக்களை இழந்திருந்தது. 4வது விக்கட்டுக்காக கிளைவ்லொயிட், களிச்சாரன் ஆகியோர் இணைந்து பெற்ற 149 ஓட்டங்கள் போட்டிக்கு புனர்வாழ்வினை வழங்கியது. இப்போட்டியில் கிளைவ் லொயிட் 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இவற்றுள் 2 ஆறுகளும், 12 எல்லைகளும் அடங்கும். பந்துவீச்சில் அவுத்திரேலியப் பந்து வீச்சாளர் கெரி இல்மா 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பாடிய அவுத்திரேலியா அணியினரினால் 58.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களையே பெறமுடிந்தது. குறுகிய ஓட்டங்களைப் பெற்று 292 ஓட்ட இலக்கையடைய முனைந்த அவுத்திரேலியா அணியினர் 5 விக்கட்டுக்கள் ரன்-அவுட் முறையில் வீழ்த்தப்பட்டனர். பந்துவீச்சில் மேற்கிந்திய அணியின் கீத் போயிசு 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

17 ஓட்டங்களினால் மேற்கிந்திய அணியினர் வெற்றிபெற்று முதலாவது உலகக்கோப்பையை வென்றனர். இப்போட்டியில் மேற்கிந்திய அணித்தலைவர் கிளைவ் லொயிட் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

21 சூன் 1975
மேற்கிந்தியத் தீவுகள்  291/8 - 274  ஆத்திரேலியாலோர்ட்ஸ், லண்டன்
Remove ads

இலங்கை அணியின் நிலை

இப்போட்டித் தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணியினராலும், கிழக்கு ஆபிரிக்கா அணியினாலும் எந்தவொரு போட்டியிலும் வெற்றிகொள்ள முடியவில்லை. இலங்கை, அவுத்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியின்போது அவுத்திரேலியப் பந்து வீச்சாளர்களான ஜெப் தோம்சன், லிலி ஆகியோரின் பந்துவீச்சில் இலங்கை அணியினைச் சேர்ந்த துலிப் மென்டிஸ், சுனில் வெத்தமுனி இருவரும் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads