20-ஆம் நூற்றாண்டு
நூற்றாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
20 ஆம் நூற்றாண்டு (20th century) கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1901 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 2000 இல் முடிவடைந்தது.
முக்கிய நிகழ்வுகள்
போர்களும் அரசியலும்
- மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
- முதலாம் உலகப் போர் (1914–1918)[1]
- அக்டோபர் புரட்சி
- பெரும் பொருளியல் வீழ்ச்சி Great Depression
- இரண்டாம் உலகப் போர் (1939–1945) [2]
- பல நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் ஆரம்பித்து மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை
- ஐக்கிய நாடுகள் அவையும் அதன் அங்கங்களாக உணவு, கல்வி, கலாசாரம் தொடர்பான உப அமைப்புகளும் ஏற்படுத்தப் பட்டன.
புதிய நாடுகள்
- ஏகாதிபத்திய அரசுகளிடமிருந்து பல ஆசிய, ஆபிரிக்க நாடுகள் விடுதலை பெற்று தனித்தனி நாடுகளாயின.
தகவல், போக்குவரத்து புரட்சி
- வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் பெருவளர்ச்சி பெற்று சாதாரண மக்கள் தகவல் அறியும் வாய்ப்பு பெருகியது.
- போக்குவரத்து சாதனங்கள் முன்னேற்றமடைந்து சாதாரண மக்களும் தூர இடங்களுக்கு இலகுவில் சென்றுவரும் வசதி கிட்டியது.
- இணையம் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது
- விண்வெளி அறிவியல் வளர்ச்சியடைந்து மனிதன் சந்திரனில் காலடி எடுத்து வைத்தான்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads