2014 - 2019 இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியாவில் மே 26, 2014 முதல் நரேந்திர மோதி தலைமையிலான அரசு செயல்படத் தொடங்கியது. இந்த அரசின் பொருளாதாரக் கொள்கையும் அது குறித்த செயற்பாடுகளும் இக்கட்டுரையில் பதிவுசெய்யப்படுகின்றன.

500, 1000 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்

நவம்பர் 8, 2016 அன்று நள்ளிரவு முதல் 500, 1000 தாள்கள் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் செல்லாதது ஆக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[1]

பணவீக்கம்

  • நாட்டின் பணவீக்கம் சூன் 17, 2014 அன்றின்படி 6.01 சதவிகிதமாக இருந்தது. முந்தைய 5 மாதங்களில் இது அதிகமாகும். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றின் விலை உயர்வே பணவீக்கம் அதிகரிக்கக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது[2]. இந்த பணவீக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஏற்றுமதியைக் கட்டுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அரசு அறிவித்தது. மேலும் பதுக்கல்காரர்களை கண்காணிக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன[3].
Remove ads

வெளிநாட்டு முதலீடு

வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும்பொருட்டு சட்டங்கள் எளிமைப்படுத்தப்படுமென சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்[4].

சர்க்கரை விலையுயர்வு (சூன் 23, 2014)

வெளிச்சந்தையில் சர்க்கரையின் விலை ஒரு கிலோவுக்கு 10 உரூபாய் உயர்ந்தது. சர்க்கரை இறக்குமதி வரி 15%இலிருந்து 40% உயர்த்தப்பட்டதே இதற்குக் காரணம்[5].

வறட்சியை எதிர்கொள்ளல்

  • 2014ஆம் ஆண்டில் வரவாய்ப்புள்ள வறட்சியை எதிர்கொள்ளத் தேவையான உத்திகளை வகுக்குமாறு மாநிலங்களை அரசு அறிவுறுத்தியது. வருநிகழ்வுத் திட்டத்தினை (contingency plan) தயாரித்துள்ளதாக அரசு அறிவித்தது[6].

ஒன்றிய வரவு செலவுத் திட்டம்

2014

சூலை 10 அன்று வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது[7].

2015

2016

2017

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads