2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம்

From Wikipedia, the free encyclopedia

2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம்map
Remove ads

2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம் 2015 அக்டோபர் 26 அன்று ஆப்கானித்தானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தைக் குறிக்கும். இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 360 பேர் உயிரிழந்தனர். 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[3].

விரைவான உண்மைகள் நாள், தொடக்க நேரம் ...

அக்டோபர் 26, 2015 அன்று 14:45 (09:09 ஒபநே) 7.5 அளவிலான நிலநடுக்கம் தெற்காசியாவில்,[4] இந்து குஷ் பகுதியில்[5] ஆப்கானித்தானின் அலகாதரி-யெ கிரண் வா முஞ்சனுக்கு வடக்கே 45கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.[6] நிகழ்நேரத் தகவல்களின்படி 180 பேர் உயிரிழந்துள்ளனர்;இவர்களில் 147 பேர் பாக்கித்தானிலும் 33 பேர் ஆப்கானித்தானிலும் உயிரிழந்துள்ளனர்.[7] ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, தஜிகிஸ்தான், கிர்கிசுத்தான் நாடுகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.[8][9][10][11] இந்திய நகரங்களான புது தில்லி, சிறிநகரிலும் சீனாவின் சிஞ்சியாங் பகுதியில் உள்ள கஷ்கர், அக்சூ, ஹோதன் நகர்களிலும் உணரப்பட்டன.[12]

பாக்கித்தானிய தினசரி தி நேசன் இந்த நிலநடுக்கம் 210 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட பாக்கித்தானின் மிகப்பெரிய நிலநடுக்கமாக அறிவித்துள்ளது.[13]

பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே அக்டோபரில் 2005இல் காசுமீரில் இதே பகுதியில் இதேயளவில் (7.6 Mw)ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 87,351 உயிரிழப்புகளும், 75,266 காயங்களும், 2.8 மில்லியன் இடப்பெயர்வுகளும் 250,000 கால்நடை இழப்புகளும் ஏற்பட்டன. இவை இரண்டுக்குமுள்ள முதன்மை வேறுபாடு நிகழ்வு ஏற்பட்ட ஆழத்திலாகும்; 2005 நிலநடுக்கம் 15 கி.மீ. ஆழத்திலும் தற்போதைய நிலநடுக்கம் 212.5 கி.மீ. ஆழத்திலும் ஏற்பட்டுள்ளன.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads