2016 நீசு தாக்குதல்கள்

From Wikipedia, the free encyclopedia

2016 நீசு தாக்குதல்கள்map
Remove ads

சூலை 14, 2016 அன்று பிரான்சின் நீஸ் நகரத்தில் பாஸ்டில் நாள் கொண்டாட்டங்களின் போது மக்கள்கூட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நீஸ் புரோமானாடு டெசு ஆங்கிலேசு சாலையில் வேண்டுமென்றே மக்கள்கூட்டத்தின்மீது சுமையுந்து ஒன்றை மிக விரைவாக ஓட்டியும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியும் குறைந்தது 84 பேர் வரை கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர் தனியாள் என்றும் வாகனம் இரண்டு கி.மீ. (1.25 மைல்கள்) கூட்டத்தினுள் சென்று மோதியது என்றும் காவல்துறை அறிவித்துள்ளது. இந்த சுமையுந்தின் ஓட்டுநரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.[5] இந்தத் தாக்குதலை நடத்தியவர் மொகமது லாவ்யிஜ் பூலெல் என கண்டறியப்பட்டுள்ளது.[6][7]

விரைவான உண்மைகள் இடம், ஆள்கூறுகள் ...
Thumb
புரோமெனாடெ சாங்கிலேசு (ஆங்கிலேயர் நடைத்தடம்)
Remove ads

பின்னணி

தாக்குதல் நடப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்னதாக, காலையில், பிரான்சிய குடியரசுத் தலைவர் பிரான்சுவா ஆலந்து நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதலுக்குப் பிறகு செயலாக்கத்தில் இருந்த நெருக்கடி நிலையை சூலை 26, 2016 அன்று தூர் த பிரான்சு முடிந்தவுடன் விலக்குவதாக உறுதியளித்தார்.[8]

தாக்குதல்

நீஸ் நகரத்தில் ஏறத்தாழ 22:40 உள்ளூர் நேரத்திற்கு பாஸ்டில் நாள் கொண்ட்டாட்டங்களின் அங்கமாக வாணவெடிக் காட்சியை காணக் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது 25-tonne (28-டன்) சரக்குந்தி ஒன்றை புரொமெனேடு டெசு ஆங்கிலேசு சாலையில் மிக விரைவாக செலுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. சுமையுந்தி 32 முதல் 40 km/h (20 முதல் 25 mph) வேகத்தில் செலுத்தப்பட்டு மக்கள் மீது மோதுவதற்கு முன்பாக குறைந்தது 100 m (330 அடி) தொலைவு வந்துள்ளது.[9]

செபாஸ்டியன் அம்பெர்ட் என்ற உள்ளாட்சி அமைப்பு அலுவலர் "இறந்தவர் எண்ணிக்கை மிகக் கூடுதலாக உள்ளது" என்றும் துப்பாக்கிச் சீடு பரிமாற்றம் நடந்ததாகவும் சுமையுந்து ஓட்டுநர் கொல்லப்பட்டு விட்டதாகவும் கூறினார்.[10] சில நேரடி சாட்சிகளும் இதனை உறுதி செய்தனர்.[11] வண்டியைச் சோதனையிட்டதில் பல ஆயுதங்களும் கையெறி குண்டுகளும் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.[12][13][14]

வட்டார சட்டப்பேரவை தலைவர் கிறிஸ்டியன் எசுட்ரோசி தாக்குதலின்போது 70க்கும் கூடுதலானவர்கள் உயிரிழந்தனர் எனக் கூறியுள்ளார்.[15]

Remove ads

தாக்கியவர்

இந்தத் தீவிரவாதத் தாக்குதலை நடத்தியவர் 31 அகவையான பிரான்சிய- தூனிசிய இருநாட்டு குடியுரிமை பெற்ற மனிதர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்; அவரது பெயர் மொகமது லாவ்யீஜ் பூலெல்.[16] வண்டியில் இவரது அடையாள அட்டை இருந்தது.[4]

காவல்துறை அறிக்கைகளின்படி தூனிசியாயில் பிறந்த மொகமது 2005இல் குடிபெயர்ந்து பிரான்சிய குடியனுமதி பெற்று நீசு நகரில் வாழ்ந்து வந்தார்.[7] திருமணம் புரிந்து மூன்று மக்கள் உள்ளனர்; ஆனால் மணமுறிவுக்கான செயற்பாட்டில் இருந்தார். பணநெருக்கடியில் இருந்த மொகமது ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். தாக்குதலுக்கு ஓராண்டுக்கு முன்னர்தான் சுமையுந்து ஓட்டுவதற்கான அனுமதியைப் பெற்றிருந்தார்.[16]

ஊடகச் செய்திகளின்படி, ஐந்து குற்றவியல் குற்றங்களுக்காக காவல்துறையில் அறியப்பட்டிருந்தார். குறிப்பாக ஆயுதமேந்திய வன்முறைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு ஒரு மாதம் முன்புதான் போக்குவரத்து விபத்தொன்றிற்காக கைது செய்யப்பட்டார். பிரான்சில் வசிக்கும் இவரது பெற்றோரும் மணமுறிவு பெற்றவர்கள். மொகமது அடிக்கடி தூனிசியா செல்வார். தூனிசிய மண்ணில் எந்தவொரு தீவிரவாதச் செயலிலும் ஈடுபட்டதாக தூனிசிய அதிகாரிகளிடம் பதியப்படவில்லை. இருப்பினும் போதை மருந்துகள், மது தொடர்புள்ள குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக தெரிகின்றது.

பாதிப்படைந்தவர்

தாக்குதலில் மொத்தம் 84 பேர் உயிரிழந்துள்ளனர்; 52 பேர் தங்கள் காயங்களுக்காக நெருக்கடி சிகிட்சை பெற்று வருகின்றனர்.[34] பல பிரான்சியக் குடிகள் இறந்துள்ள வேளையில் பல வெளிநாட்டினரும் உயிரிழந்துள்ளனர்.[18][35][36] இறந்தவர்களில் பல முசுலிம்களும் இருந்துள்ளனர்.[37][38][39]

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads