2022 சில்சார் வெள்ளம்
இந்தியாவின் அசாம் மாநிலப் பேரிடர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
2022 சில்சார் வெள்ளம் (2022 Silchar Floods) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 ஆம் தேதி ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டு அசாம்-வங்காளதேச வெள்ளத்தின் ஒரு பகுதியாக பெத்குண்டியில் பராக் ஆறு உடைந்ததால் இந்த வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் 32 மாவட்டங்களில் 5.4 மில்லியன் மக்களைப் பாதித்தது. [2] 200 எண்ணிக்கைக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். [3] [1] சில்சார் நகரம் உடைப்புக்கு வெறும் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் இருந்ததால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது, நகரத்தின் 90 சதவீதம் நீருக்கடியில் மூழ்கி இருந்தது. [4] இப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், [5] வெள்ளம் ஏற்படுத்திய சேதத்தின் அளவிற்கு மனிதனால் உருவாக்கப்பட்ட சில திட்டவட்டமான காரணங்களும் இருந்தன. அப்போதைய அசாம் மாநில முதல்வர் இமந்தா பிசுவா சர்மாவும் மக்களுக்கு ஆற்றிய உரையில் இதை குறிப்பிட்டார். [6]
சூலை மாதம் 2 ஆம் தேதியன்று வெள்ளத்தை ஏற்படுத்திய கரையை உடைத்ததற்காக காபூல் கான் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்துமீறி அக்காட்சியை ஒளிப்பதிவும் இவர் எடுத்திருந்தார். [7] சூலை 6 ஆம் தேதிக்குள், இதே செயலுக்காக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். [8] அசாம் முதல்வர் இமந்த பிசுவா சர்மா, வெள்ளம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்றும், இதற்குக் காரணமானவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் கூறினார். [9] இந்தச் செயலை நாசவேலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். [10]
சில்சார் நகரம் 11 நாட்களுக்கு நீரில் மூழ்கியது, சில இடங்களில் தண்ணீர் 12 அடிகள் (3.7 மீட்டர்கள்) வரை உயர்ந்திருந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads