சில்சார்

From Wikipedia, the free encyclopedia

சில்சார்map
Remove ads

சில்சார் (Silchar) அசாம் மாநிலத்திலுள்ள கச்சார் மாவட்டத்தின் தலைநகராகும். குவகாத்தியின் தென்கிழக்கே 343 கிலோமீட்டர்கள் (213 mi) தொலைவில் உள்ளது. இது அசாமின் இரண்டாவது பெரிய நகரமாகும். பராக் பள்ளத்தாக்கில் உள்ள மிகப்பெரிய நகரமாகவும் விளங்குகின்றது.[1]

விரைவான உண்மைகள் சில்சார், நாடு ...

சண்டைகள் மிக்க வடகிழக்குப் பகுதிகளில் அரசியல் முறையில் நிலையான ஆட்சியைக் கொண்டிருப்பதால் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இந்நகரத்தை போன் மோட் “(அமைதித் தீவு)” என குறிப்பிட்டார்.[2]

Remove ads

பெயர்க்காரணம்

பிரித்தானியர் ஆட்சியின்போது பராக் ஆற்றுக் கரையில் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மெதுவாக ஆற்றங்கரையில் ஓர் சந்தை உருவானது. பின்னர் பொருளியல் செயற்பாடுகள் கூடின. ஆற்றங்கரையில் கற்கள் அடுக்கப்பட்டு துறைமுகமாக மேம்படுத்தப்பட்டது. கற்களைக் கொண்டே புதிய சந்தையிடமும் அமைக்கப்பட்டது. இதனால் இந்த இடத்தை மக்கள் உள்ளூர் மொழியில் (வங்காளம்) சிலேர் சோர் ("கற்களாலான ஆற்றங்கரை" என அழைக்கலாயினர். காலப்போக்கில் சிலேர்சோர் சில்சார் எனச் சுருங்கியது. இந்தப் பெயரையே பிரித்தானிய அலுவலர்களும் தங்கள் அலுவல்முறை ஆவணங்களில் குறிப்பிடத் துவங்கினர். இவ்வாறு இந்தவிடம் சில்சார் எனப் பெயரிடப்பட்டது.[3]

Remove ads

வரலாறு

கச்சார் மாவட்ட ஆவணங்களில்

1850களில், பிரித்தானிய தேயிலைத் தோட்ட நிறுவனர்கள் பர்மிய எல்லையை அடுத்த மணிப்பூரில் போலோ விளையாட்டை ஆடத்துவங்கினர். தொடர்ந்து முதல் போலோ கழகம் சில்சாருல் துவங்கப்பட்டது.[4][5]

தற்கால போலோ விளையாட்டு நெறிகளின்படி முதல் போட்டி சில்சாரில் விளையாடப்பட்டது;இதனை அறிவிக்கும் தகடு இன்னமும் சில்சாரின் மாவட்ட நூலகத்தின் பின்னர் உள்ளது.[4][5]

பராக் பள்ளத்தாக்கில் மொழிப்போர்

Thumb
சில்சார் தொடர்வண்டி நிலையம் பாஷா சகீத் நிலையம் (மொழித் தியாகியர் நிலையம்) என விவரிக்கப்பட்டுள்ளது.

வங்காள மொழிக்காக சில்சாரில் போராட்டம் எழுந்தது. 1961இல் அந்நாளைய முதல்வர் பிமலப் பிரசாத் சாலிகா தலைமையிலான அசாம் அரசு அசாமியை கட்டாயமாக்கி ஆணைப் பிறப்பித்தார். இதற்கு பராக் பள்ளத்தாக்கிலிருந்த வங்காளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மே 19, 1961இல் அசாம் காவல்துறை ஆயுதமில்லா போராளிகள் மீது சில்சார் தொடர்வண்டி நிலையத்தில் துப்பாக்கிச்் சூடு நடத்தினர். அதில் பதினோரு பேர் தங்கள் தாய்மொழிக்காக உயிர் துறந்தனர்.

  • கனைலால் நியோகி
  • சண்டிச்சரண் சூத்ரதார்
  • இதேஷ் பிசுவாசு
  • சத்யேந்திர தேப்
  • குமுத் ரஞ்சன் தாஸ்
  • சுனில் சர்க்கார்
  • தரணி தேப்நாத்
  • சச்சிந்திர சந்திர பால்
  • பீரேந்திர சூத்ரதார்
  • சுக்கமால் பூரகயஸ்தா
  • கமலா பட்டாச்சார்யா

இதனால் போராட்டம் தீவிரமடைய, அசாம் அரசு சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டியதாயிற்று. இறுதியில் பராக் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் வங்காள மொழி அலுவல்முறை மொழியாக அறிவிக்கப்பட்டது.[6][7] பிரிவு 5 அசாம் சட்டம் XVIII, 1961, இவ்வாறு திருத்தப்பட்டது: “பிரிவு 3இல் உள்ளதற்கு முற்சார்பின்றி வங்காள மொழி மாவட்ட நிலை வரை நிர்வாகத்திற்கும் மற்ற அலுவல்முறை காரணங்களுக்கும் பயன்படுத்தப்படும்.”[8]

Remove ads

புவியியல்

சில்சார் அசாமின் தென்பகுதியில் அமைந்துள்ளது.[9][10]

சில்சார் மாநகரப் பகுதியின் பரப்பளவு 257.5  கிமீ2. இது கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 25 மீட்டர்கள் (82 அடி) உயரத்தில் உள்ளது.[11]

மக்கள்தொகை

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சில்சாரின் மக்கள்தொகை 6,87,324.[12] பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 988 பெண்களாம். இது தேசிய சராசரியான 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற விகிதத்தைவிடக் கூடுதலாகும். மாநகரப் பகுதியில் படிப்பறிவு விகிதம் 90.26% ஆக, தேசிய சராசரியான 84% (2017) விடக் கூடுதலாகும். ஆண்களின் படிப்பறிவு 92.90% ஆகவும் பெண்களின் படிப்பறிவு 87.59% ஆகவும் உள்ளது.[13] 86.31% மக்கள் இந்துக்களாகவும் பெரும்பான்மையினராகவும் உள்ளனர். அடுத்து இசுலாமியர் ஏறத்தாழ 12.17% உள்ளனர். சமண சமயத்தினர் 0.79%, கிறித்தவர்கள் 0.59%, சீக்கியர்கள் 0.04% மற்றும் புத்த சமயத்தினர் 0.04% ஆகவும் உள்ளனர். கிட்டத்தட்ட 0.08% பே 'எச்சமயத்தினருமில்லை' எனக் குறிப்பிட்டிருந்தனர்.[13]

Remove ads

வானிலை

சில்சாரில் வெப்பமண்டல பருவமழைசார் வானிலை (கோப்பென் Am) குளிர்காலத்தில் சற்றே வெப்பமாக உள்ளது. குளிர்காலத்தில் இளங்காலையில் குளிர்ந்தும் உலர்ந்தும் பின்னர் சூரியன் எழ எழ வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் உள்ளது. இருப்பினும் “ஈரக்” காலம் பருவமழை நகரும் ஏப்ரல் மாதத்திலிருந்தே துவங்குகிறது. எனவே ஆண்டில் ஏழு மாதங்களுக்கு சில்சாரில் வெப்பமும் ஈரமும் கலந்த, இடிமழைகள் நிறைந்த வானிலை அக்டோபர் வரை நீடிக்கிறது. நவம்பரில் குளிர்காலம் துவங்கும் முன்னர் ஒரு மாத காலத்திற்கு வெப்பமான, உலர்ந்த வானிலையைக் காணலாம்.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், சில்சார் (1971–2000), மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads