ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா (Himanta Biswa Sarma, அசாமிய மொழி: হিমন্ত বিশ্ব শৰ্মা, பிறப்பு: 1 பிப்ரவரி 1969) பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியான இவர் அசாம் அரசின் 15வது முதலமைச்சராக 10 மே 2021 அன்று பதவியேற்றார்.[1] அசாம் சட்ட மன்றத்திற்கு ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011ஆம் ஆண்டு முதல் 2015 வரை இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகவும், பின் மே 2016 முதல் 2021 வரை பாரதிய ஜனதா கட்சி சார்பாகவும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2] இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி 23 ஆகத்து 2015 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[3]
24 மே 2016 அன்று பாரதிய ஜனதா கட்சி ஆளும் அசாம் அரசின் மூத்த அமைச்சராகப் பதவியேற்றார்.[4]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் கைலாஷ் நாத் சர்மா - மிருணாளினி தேவி தம்பதியருக்கு 1 பிப்ரவரி 1969 அன்று ஜோர்ஹாட் நகரத்தில் பிறந்தார்.[5] இவர் கவுகாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை அரசியல் படிப்பை முடித்தார். பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1996 முதல் 2001 முடிய வழக்கறிஞராகப் பணியாற்றினார். 7 சூன் 2001 அன்று ரினிகி பூயான் என்ற பெண்மணியைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு நந்தில் பிஸ்வாஸ் சர்மா மகன் உள்ளார்.[6]
Remove ads
அரசியல் வாழ்க்கை
சர்மா இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2001 மற்றும் 2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஜாலுக்பாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ந்து மூன்று முறை அசாம் சட்டமன்றத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] சர்மா 2002 முதல் 2014 முடிய அசாம் அரசில் வேளாண்மை, திட்டம் & மேம்பாட்டுத் துறை, நிதி, சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் அமைச்சராக பதவி வகித்தார்.[7][8]
21 ஏப்ரல் 2014 அன்று இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய சர்மா, 23 ஆகத்து 2015-இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வென்ற பாரதிய ஜனதா கட்சி அரசின் நிதி, திட்டம் & மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடும்பநலம், கல்வி & பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார் சர்மா. 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் சர்மா மீண்டும் ஜாலுக்பாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்காவது முறையாக வென்று, சர்பானந்த சோனாவால் தலைமையிலான அமைச்சரவையில் மூத்த அமைச்சராகப் பதவி வகித்தார்.
2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில் சர்மா ஐந்தாம் முறையாக ஜாலுக்பாரி தொகுதியிலிருந்து வென்று அசாம் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
Remove ads
அசாம் முதலமைச்சராக
நியமனம்
8 மே 2021 அன்று, சர்மா மற்றும் அன்றைய முதல்வர் சர்பானந்தா சோனோவால் ஆகியோர் புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த விவாதங்களுக்காக புது தில்லிக்கு அழைக்கப்பட்டனர். சர்மா மற்றும் சோனோவால் ஆகியோர் பாஜக தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் சா ஆகியோருடன் 4 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியான பேச்சை நடத்தினர். மே 9 அன்று சோனோவால் தனது பதவிதுறப்பு கடிதத்தை ஆளுநர் ஜகதீஷ் முகீயிடம் கொடுத்தார், அதே நாளில் அடுத்த முதலமைச்சரை தீர்மானிக்கும் கூட்டம் நடைபெற்றது.[9][10][11][12] சர்மாவின் பெயரை பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சீத் குமார் தாஸ், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நந்திதா கர்லோசா ஆகியோர் முன்மொழிந்தனர். முதலமைச்சராக வேறு எவரும் முன்வைக்கப்படாததால், சர்மா பாஜக சட்டமன்றத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13]
ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா 2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில் ஜாலுக்பாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐந்தாம் முறையாக வென்று அசாம் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 10 மே, 2021 அன்று சர்மா 15 வது அசாம் முதலமைச்சராகப் பதவியேற்றார்.[14][15][16][17] இவருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.[15]
பதவிக்காலம்
சூன் 2021 இல் ஒழுக்கமான குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு முஸ்லிம் சமூகத்தை சர்மா வலியுறுத்தினார். அசாமில் சட்டவிரோதமாக பசுக் கடத்தலுக்கு எதிராக புதிய சட்டம் தேவை என்று இவர் வலியுறுத்தினார்.[18] 2021 இல் பசுந்தரா திட்டம் சர்மாவின் கீழ் தொடங்கப்பட்டது; இது நிலம், சொத்து தொடர்பான பிரச்சனைகளில் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[19] இவரது தலைமையிலான அசாம் அரசின் நிதியுதவியுடன் கூடிய 740 இசுலாமிய மதரசாக்களை சாதாரண பள்ளிகளாக மாற்றும் முடிவை அறிவித்துள்ளது.[20]
இவரது பதவிக்காலத்தில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் அதிகரித்தது, அதை இவர் வெளிப்படையாக ஆதரித்தார்.[21][22][23] பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி மாநிலத்திலுள்ள பல இஸ்லாமிய மதரசாக்களை இவரது அரசாங்கம் இடித்துள்ளது.[24]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads