2022 தில்லி மாநகராட்சி தேர்தல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தில்லி மாநகராட்சி தேர்தல், தில்லி மாநகராட்சியின் 250 வார்டு உறுப்பினர்களை நேரடித் தேர்தல் மூலம் வாக்காளர்கள் தேர்வு செய்ய 4 டிசம்பர் 2022 அன்று தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 7 டிசம்பர் 2022 நடைபெற்றது. தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 18 மே 2022 அன்று தில்லியின் 3 மாநகராட்சிகளை ஒன்றிணைத்து தில்லி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு நடக்கும் இத்தேர்தலே தில்லி மாநகராட்சிக்கு நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். இத்தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வென்று, தில்லி மாநகராட்சியைக் கைப்பற்றியது.
Remove ads
பின்னணி
தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் பதவிக்காலம் 18 மே 2022 அன்றுடன் நிறைவுற்றது. [1] .
மீண்டும் தில்லி மாநகராட்சிகளை ஒன்றிணைத்தல்
இந்திய அரசு 22 மார்ச் 2022 அன்று தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் பகுதிகளை ஒருங்கிணைத்து மீண்டும் ஒரே தில்லி மாநகராட்சியாக நிறுவ சட்ட முன்வடிவத்திற்கு ஒப்புதல் வழங்கியது.[2] ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சி 22 மே 2022 அன்று நிறுவப்பட்டது.[3]
Remove ads
வார்டுகள் இட ஒதுக்கீடு
250 வார்டுகளை கொண்ட தில்லி மாநகராட்சியின் 42 வார்டுகள் அட்டவணை சமூகத்தவர்களுக்கும், 50 ச தவீதம் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. [4]
தேர்தல் அட்டவணை
தில்லி அரசின் தேர்தல் ஆணையம் 4 நவம்பர் 2022 அன்று தில்லி மாநகராட்சிக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.[5]
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
தில்லி மாநகராட்சித் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையாக வார்டுகளை கைப்பற்றி தில்லி மாநகராட்சியை கைப்பற்றும் என்றும், பாரதிய ஜனதா கட்சி இரண்டாம் இடத்திலும்; இந்திய தேசிய காங்கிரசு மூன்றாம் இடத்திலும் வரும் எனக் கூறப்பட்டது.[6]
தேர்தல் முடிவுகள்
வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தமுள்ள 250 வார்களில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளையும், பாரதிய ஜனதா கட்சி 104 வார்டுகளையும், காங்கிரஸ் கட்சி 9 வார்டுகளையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர்.[7]
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads