தில்லி மாநகராட்சி

From Wikipedia, the free encyclopedia

தில்லி மாநகராட்சி
Remove ads

தில்லி மாநகராட்சி, தற்போது தில்லி உள்ளாட்சியை நிர்வகிக்கும் தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி, புது தில்லி மாநகராட்சி மன்றம் மற்றும் தில்லி பாசறை மன்றம் ஆகிய ஐந்து உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைக்க,, தில்லி மாநகராட்சியை நிறுவ, தில்லி மாநகராட்சி (திருத்தம்) சட்டம், 2022, முன்மொழிவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய, இந்திய அமைச்சரவை 22 மார்ச் 2022 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.[1] நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான சட்ட முன்மொழிவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.[2] [3][4] ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சி 22 மே 2022 அன்று நிறுவப்பட்டது.[5]2022 தில்லி மாநகராட்சி தேர்தல் 4 டிசம்பர் 2022 அன்று நடைபெறுகிறது.

விரைவான உண்மைகள் தில்லி மாநகராட்சி, வகை ...
Thumb
2023க்கு முன்னர் தில்லியில் இருந்த தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி, கிழக்கு தில்லி மாநகராட்சி, புது தில்லி மாநகராட்சி மன்றம் மற்றும் தில்லி பாசறை மன்றம் என 5 உள்ளாட்சி அமைப்புகளின் வரைபடம்

இதற்கான தில்லி மாநகராட்சி (திருத்தம்) சட்டம் 2022 (Delhi Municipal Corporation (Amendment) Bill, 2022) முன்மொழிவை உள்துறை அமைச்சர் அமித் சா நாடாளுமன்றத்தின் மக்களவையில் 30 மார்ச் 2022 அன்று அறிமுகப்படுத்தினார். குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் இச்சட்ட முன்மொழிவு பெரும்பான்மையான உறுப்பினர்களால் ஏற்கப்பட்டது. [6]5 ஏப்ரல் 2022 அன்று உள்துறை அமைச்சர் அமித் சா இச்சட்ட மொழிவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார்.[7]

மீண்டும் தில்லி நகராட்சியை மீண்டும் நிறுவ இருப்பதால், ஏற்கனவே உள்ள வடக்கு தில்லி மாநகராட்சி 104 வார்டுகளையும், தெற்கு தில்லி மாநகராட்சி 104 வார்டுகளையும் மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி 64 வார்டுகளையும் கொண்டிருப்பதை, தில்லி மாநகராட்சியாக நிறுவிய பிறகு 250 வார்டுகளாகக் குறைக்கப்படுகிறது. [8]

Remove ads

துவக்கம்

22 மே 2022 அன்று தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு தில்லி மாநகராட்சி செயல்படத்துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[9][10]

வரலாறு

உள்ளாட்சி நிர்வாக வசதிக்காக 13 சனவரி 2012 அன்று முந்தைய தில்லி மாநகராட்சியை தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. [11]

முதல் தேர்தல்

தில்லி மாநகராட்சியின் 250 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான 2022 தில்லி மாநகராட்சி தேர்தல் 4 டிசம்பர் 2022 அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 7 டிசம்பர் 2022 அன்று நடைபெறுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads