அ. இராமசாமி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அ. இராமசாமி (19, திசம்பர், 1943) பல்கலைக்கழகத் துணைவேந்தர், வரலாற்றாசிரியர், நூலாசிரியர், அரசு நிருவாகி எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்.

விரைவான உண்மைகள் அ. இராமசாமி, துணைத்தலைவர், உயர்கல்வி மன்றம் ...
Remove ads

இளமைக்காலம்

இராமசாமி 1943ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 19ம் தேதி மதுரையில் திரு அய்யாச்சாமி - காவேரி அம்மாள் இணையருக்கு மகனாக பிறந்தார். இவருடைய துணைவியாரின் பெயர் ஆர். வசந்தா.

ஆற்றிய பணிகள்

மதுரைக் கல்லூரி மற்றும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றபின் 26 ஆண்டுகள் அரசுக் கல்லூரிகளில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணி புரிந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தேர்வாணையராகவும் பதிவாளராகவும் பணியாற்றினார். பிறகு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக ஆனார். இவர் துணைவேந்தர் பதவியினை 10 நவம்பர் 2000 முதல் 09 நவம்பர் 2003 வரை வகித்தார். இக்காலத்தில் பல்கலைக்கழக தொலைதூர மையங்களைத் தமிழகத்திற்கு வெளியையும் நிறுவியதன் மூலம் பல்கலைக்கழக நிதி நிலை மேம்பாடு அடைந்தது.[1] தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் பதவியில் 2006 முதல் 2011 வரையிலிருந்தார். தற்பொழுது புதிய ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் பதவியில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.[2]

Remove ads

எழுத்துப் பணிகள்

அண்ணாதுரையின் மொழிக்கொள்கையைப் பொருளாகக் கொண்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். புதுச்சேரி விடுதலைப் போராட்ட வரலாறு என்னும் இவருடைய நூலுக்குத் தமிழ் நாடு அரசு பரிசு வழங்கியது. தமிழ்நாட்டு வரலாறு என இவர் எழுதிய நூல் மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.

எழுதிய நூல்கள்

  • தமிழ்ப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும்
  • வள்ளுவமும் வரலாறும்
  • இரத்தத்தில் ஐம்பது நாள்கள்
  • தமிழ்நாட்டு வரலாறு[3]
  • புதுச்சேரி வரலாறு[4]
  • புதுச்சேரி விடுதலைப் போராட்ட வரலாறு
  • சூரியன் மறைவதில்லை
  • சோழர் வரலாறு
  • என்று முடியும் இந்த மொழிப் போர்
  • துரோகம் ஒரு தொடர்கதை
  • அண்ணாவின் மொழிக் கொள்கை
  • வள்ளுவமும் வரலாறும்,பூம்புகார் பதிப்பகம், பிரகாசம் சாலை, சென்னை-108இவர்ஆங்கிலத்திலும் சில வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார்.

இவர் ஆங்கிலத்திலும் சில நூல்களை எழுதியுள்ளார்.

Remove ads

உசாத்துணை

மேலும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads