அகத்தீச்சுரம் அகத்தீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அகத்தீச்சுரம் அகத்தீசுவரர் கோயில் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரியிலிருந்து 5 கி.மீ.. தொலைவிலும், நாகர்கோயிலிருந்து 15 கி.மீ.. தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் தேவார வைப்புத்தலமாகும். அப்பர் பாடிய பெருமையுடையது.[1]

விரைவான உண்மைகள் அகத்தீச்சுரம் அகத்தீசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

அமைவிடம்

நாகர்கோயில் - கன்னியாகுமரி சாலையில் உள்ள கொட்டாரம் என்னுமிடத்திலிருந்து, ஒரு கி.மீ.. தொலைவில் அமைந்துள்ள வடுகன்பற்று என்னுமிடத்திற்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 130 அடி உயரத்தில், 8.1103°N 77.5242°E / 8.1103; 77.5242 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.

இறைவன்,இறைவி

கருவறையில் உள்ள மூலவர் அகத்தீசுவரர் ஆவார். இறைவி அறம் வளர்த்த நாயகி, அமுதவல்லி ஆவார்.[2] இத்தலம் அகத்தியர், தன்னுடைய மனைவி லோபா முத்திரையுடன் வழிபட்ட சிறப்பினையுடையது.

குடமுழுக்கு

21 மார்ச் 1996இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

மற்றொரு தலம்

இதே பெயரில் மற்றொரு கோயில் திண்டிவனம் பாண்டிச்சேரி சாலையில் உள்ள கிளியனூரில் அகத்தீசுவரம் என்ற பெயரில் உள்ளது.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads