அசார்வா

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் அருகில் உள்ள ஒரு குடியிருப்புப்பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

அசார்வா (Asarwa) என்பது இந்தியாவின் குசராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும்[1]. பழைய அசார்வா, புதிய அசார்வா என்ற இரண்டு பகுதிகளாக இக்குடியிருப்புப் பகுதி பிரிக்கப்பட்டுள்ளது. பழைய அசார்வா ஒரு சிறிய கிராமம் போலவும் பல உற்பத்தித் தொழில்களும். நெசவுத் தொழிலும் நிலைத்திருக்கும் பகுதியாக உள்ளது. புதிய அசார்வாவில் பெரும்பாலும் குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட்டு வளர்ந்து வருகிறது.

விரைவான உண்மைகள் அசார்வாAsarwa, நாடு ...

சுற்றுலா பயணிகள் வந்து போகுமிடமாக நிலாகாந்த் மகாதேவ் ஆலயம் என்ற பழைய கோவில் ஒன்று சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. கிராம வாழ்க்கையின் சிறப்புகளை அசார்வா கிராமத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். . இரண்டு பெரிய மருத்துவமனைகள், பல் மருத்துவமனை ஒன்று, ஒரு புற்றுநோய் மருத்துவமனை ஆகியவை இங்கே அமைந்துள்ளன.

Remove ads

அமைவிடம்

விமான நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், அகமதாபாத் இரயில்வே நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் அசார்வா குடியிருப்பு அமைந்துள்ளது. அனுமன்சிங் சாலையும், எம்.முகி சாலையும் முக்கியமான இணைப்புச் சாலைகளாக உள்ளன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads