அச்சன்கோவில் ஆறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அச்சன்கோவில் ஆறு (Achankovil River) இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள ரிஷிமலை நதி, பசுக்கிடமேட்டு ஆறு மற்றும் ரமக்கல்டேரி ஆறுகள் எனும் மூன்று ஆறுகளும் இணைந்து உருவான ஆறு. கேரள மாநிலத்திலுள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தின் செழுமையான வளர்ச்சிக்கு இந்த நதியே காரணமாகவுள்ளது. இந்த நதி கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் வீயபுரம் என்ற இடத்தில் உள்ள இந்து சமய மக்களின் புனித நதியாகக் கருதப்படும் பம்பா ஆற்றுடன் இணைகிறது.[1]
Remove ads
நதியால் பயன்பெறும் நகரங்கள்
இந்த அச்சன்கோவில் நதியின் கரையில் உள்ள நிலங்களின் செழிப்பால் இந்நதிக்கரையில் பல தன்னாட்சி நகரங்கள் அமைந்துள்ளன. இந்நகரங்களில் பத்தனம் திட்டா நகரமும் ஒன்றாகும. இந்நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது.
பத்தனம் திட்டா என்ற சொல்லானது மலையாள மொழிச் சொற்களான பத்தனம் மற்றும் திட்டா என்ற சொற்களில் இருந்து உருவானதாகும். அதாவது "நதிக்கரையில் அமைந்த வீடுகள்" என்ற பொருள் உடையதாகும்.
வேறு சில நகரங்கள்
இந்த நதிக்கரையில் அமைந்துள்ள மேலும் சில நகரங்கள்
- கொன்னி
- பந்தளம்
- மாவேலிக்கரா
- எடப்பன் (கிராமம்)
- வெட்டியார்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
