அட்சய பாத்திரம் அறக்கட்டளை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அட்சய பாத்திரம் அறக்கட்டளை (Akshaya Patra Foundation) இந்தியாவில் செயல்படும் லாப நோக்கமற்ற அறக்கட்டளையாகும். இது இந்தியாவில் உள்ள பள்ளிகளுக்கு மதிய உணவை சமைத்து, அரசு நடத்தும் பள்ளிகளுக்கே நேரில் சென்று வழங்குகிறது.[1] இவ்வறக்கட்டளை 2000ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. குழந்தைகள் பசிக் கொடுமையால் கல்வி பெறுவது தடைபடுவதை தடுக்கும் நோக்கில் அட்சய பாத்திரம் அறக்கட்டளை செயல்படுகிறது.[2]பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் கனவை நனவாக்கும் முயற்சியால் அட்சய பாத்திரம் அறக்கட்டளை துவக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் உருவாக்கம், வகை ...
Remove ads

நோக்கங்கள்

  • வகுப்பறையில் பசிக் கொடுமையை நீக்குவது[3]
  • பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேலும் கூட்டுவது.
  • சமுகத்தில் சாதிகளுக்கிடையே வேற்றுமை நீக்குவது.
  • ஊட்டச்சத்து உணவை வழங்குதல்
  • மகளிர்க்கு அதிகாரமளித்தல்

குறிக்கோள்

இந்தியாவில் பசியினால் கல்வி மறுக்கப்படக்கூடாது [2]

இலக்கு

2020ஆம் ஆண்டுக்குள் 50 இலட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குதல்[4]

மதிய உணவுத் திட்டம்

கல்வி மேம்பாட்டிற்கும், வகுப்பறை பசிக்கொடுமை நீங்கவும் இந்திய அரசு இரண்டு முக்கிய திட்டங்களை வகுத்தது.

  1. அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும்
  2. மதிய உணவுத் திட்டம் (Mid-Day Meal Scheme) (MDMS)

அட்சய பாத்திரம் அறக்கட்டளையானது மதிய உணவுத் திட்டத்தை, பத்து மாநிலங்களில், நாள் ஒன்றுக்கு 10,000 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 14 இலட்சம் மாணவ மாணவியர்க்கு மதிய உணவை நேரில் சென்று வழங்கி வருகிறது. இவ்வறக்கட்டளை இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன், நாட்டில் 22 மையப்படுத்தப்பட்ட நவீன சுகாதாரமான சமையலறைகளுடன், சத்தான உணவை சமைத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்குகிறது.

Remove ads

காலக்கோடு

Thumb
அட்சய பாத்திர அறக்கட்டளையின் வளர்ச்சி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads