அட்டன், இலங்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அட்டன் (Hatton, ஹற்றன்) இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இந்நகரைச் சூழவுள்ள தேயிலைப் பெருந்தோட்டங்களுக்கு பெயர்பெற்றதாகும்.[1][2] இந்நகரமானது அற்றன்-டிக்கோயா நகர சபையால் நிர்வாகிக்கப்படுகிறது. அம்பகமுவா பிரதேச செயளாலர் பிரிவில் அமைந்துள்ளது. 2001 இலங்கை அரசின் மக்கள்தொகை கணிப்பீட்டின் படி நகரின் மக்கள்தொகை 14,255 ஆகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் றொசல்லை, கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. அட்டன், கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ள ”சிங்கமலைப் புகையிரத சுரங்கம்" இலங்கையிலேயே மிக நீளமான புகையிரத சுரங்கம் ஆகும்.
Remove ads
மக்கள் பரவல்
முக்கியமான பாடசாலைகள்
- ஹைலன்ஸ் பாடசாலை
1892 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையே அட்டன் நகரிலுள்ள பாடசாலைகளில் பெரியதாகும். இது முக்கியமாக தமிழர்கள் கல்விகற்கும் பாடசாலையாகும்.
- சிறீபாத பாடசாலை
இது முக்கியமாக சிங்கள மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையாகும்.
- St. Gabriel's Convent
இது பெண்களுக்கான பாடசாலையாகும்.
- St. John Bosco's College
இது ஆண்களுக்கான பாடசாலையாகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads