அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

From Wikipedia, the free encyclopedia

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
Remove ads

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை (Anna University, Chennai) இந்தியாவில், தமிழ்நாட்டில், சென்னையில் அமைந்துள்ள  ஒரு தொழில்நுட்ப பல்கலைக் கழகமாகும். சென்னை பல்கலைக்கழகமானது அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, அண்ணா பல்கலைக் கழகம் சென்னை (தரமணி வளாகம்), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம், திருச்சி , அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம், கோயம்புத்தூர்,அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம், மதுரை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம், திருநெல்வேலி என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட போது 2007 ஆம் ஆண்டு  பிப்ரவரி 1 ஆம் நாள் நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...

அண்ணா பல்கலைக்கழகம் சென்னையானது கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அண்ணா கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி, சென்னை ஆகிய நான்கு கல்லுாரிகளை உள்ளடக்கியது.

2011 ஆம் ஆண்டு செப்டம்பா் 14 ஆம் நாள் பல்கலைக்கழகங்களை ஒன்றிணைக்க  ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.[3]

Remove ads

மண்டல அலுவலகங்கள்

வரலாறு

Thumb
கிண்டி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள சி.என். அண்ணாதுரை அவர்களின் சிலை

உருவாக்கம்

  • 1978 செப்டம்பர் 4 ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகச் சட்டம் 1978 (தமிழ்நாடு சட்டம் 30, 1978) -இன் மூலமாக தமிழ்நாடு அரசு' அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை (முந்தைய பெயர் - அண்ணா பல்கலைக்கழகம்) உருவாக்கியது.
  • புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகமானது முந்தைய சென்னை பல்கலைக் கழகத்தின் பிரிவுகளான பொறியியல் கல்லுாரி, கிண்டி, அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, மற்றும் சென்னை, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
  • மேலே கூறப்பட்ட நிறுவனங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லுாரிகளாகின. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரை் சி. என். அண்ணாதுரையின் பெயர் சூட்டப்பட்டது.
  • 1982 ஆம் ஆண்டில் பெயரில் இருந்த “பேரறிஞர்“ மற்றும் “தொழில்நுட்பம்“ ஆகிய வார்த்தைகள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக் கழகம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.[4]

மறு உருவாக்கம்

  • 2001: 2001 ஆம் ஆண்டில், அண்ணா பல்கலைக்கழக சட்டத்திருத்தம் 2001-இன் கீழ், அண்ணா பல்கலைக்கழகம் ஒரு இணைப்பு ஏற்படுத்தக்கூடிய பல்கலைக்கழகமாக மாறியது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லுாரிகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதன் மூலம் இணைக்கப்பட்ட கல்லுாரிகளில், ஆறு அரசு பொறியியல் கல்லுாரிகளும், மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லுாரிகளும் 426 சுயநிதி பொறியியல் கல்லுாரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. [சான்று தேவை]
  • 2007: 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி 1இல் எடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முடிவின் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகமானது ஆறு பல்கலைக்கழகங்களாக பிரிக்கப்பட்டது. அவை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோயம்புத்துார், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருநெல்வேலி மற்றும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மதுரை.[5] இந்த நிறுவனங்கள் முறையாக 2007 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தொடங்கப்பட்டவை.
  • 2011: 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதியில் இந்தப் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஒன்றிணைக்க ஒரு சட்ட மசோதா நிறைவேறியது. இருப்பினும், தனித்தனியான பல்கலைக்கழகங்கள் இதுவரை செயல்பட்டு வந்தன.[6]
  • 2012: ஆகத்து 2012 இலிருந்து, அனைத்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், அண்ணா பல்கலைக்கழகம், பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக கல்லுாரி ஆகிய அனைத்தும் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டன. இப்போது அவை பின்வருமாறு அழைக்கப்படுகின்றன. :
மேலதிகத் தகவல்கள் முன்னதாக அழைக்கப்பட்ட பெயர் (ஆகத்து 2012-க்கு முன்னர்), தற்போது அழைக்கப்படுவது (ஆகத்து 2012-க்குப் பிறகு) ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads