அண்ணா மேம்பாலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மையப் பகுதியில் அண்ணா சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் ஆகும். 1973 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இது சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமும்[1][2] , இந்தியாவிலேயே மூன்றாவதாக கட்டப்பட்ட மேம்பாலமும் ஆகும். இது கட்டப்பட்ட போது இந்தியாவிலேயே நீண்ட பாலமாகத் திகழ்ந்தது[3]. அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இப்பாடலம் கட்டப்பட்டது. ஜெமினி ஸ்டூடியோஸ் இங்கு அமைந்திருந்ததால் இப்பகுதி ஜெமினி சர்க்கிள் எனவும் இங்கு கட்டப்பட்ட மேம்பாலம் ஜெமினி மேம்பாலம் எனவும் அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் குதிரைப் பந்தயத்தைத் தடை செய்ததை நினைவுகூரும் வகையில் குதிரையை அடக்கும் வீரனின் சிலைகள் மேம்பாலத்ததின் கீழே இரு பக்கங்களிலும் அமைக்கபட்டன. அமைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 20,000 வாகனங்கள் இப்பாலத்தின்வழி செல்கின்றன. ஏர்செல் செல்லுலர் நிறுவனம் இப்பாலத்தைப் பராமரிக்கத் திட்டமிட்டு, பாலத்தில் ஒளி விளக்குகளை நிறுவி பராமரித்தது.[4]
Remove ads
வரலாறும் வடிவமைப்பும்
அண்ணா மேம்பாலம் 1973 ஆம் ஆண்டு ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்டக்சன்ஸ் அண்ட் இண்டர்ஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தால் 21 மாதங்களில் ரூ 66 இலட்ணம் செலவில் கட்டப்பட்டது. 1973, ஜூலை முதல் நாளன்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. மேம்பாலத்தில் மாற்றம் தேவைப்பட்டால் கட்ட வசதியாக, இருபுறமும் அதனை நீட்டிக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 1970 களில் இருந்து அதன் வடிவமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளது.[3] மேம்பாலம் 500 மீ நீளம் கொண்டது.[5]
Remove ads
அடையாளங்கள்

மேம்பாலத்துக்கு அருகில் உள்ள குதிரையேற்ற வீரனின் சிலையை சிற்பி ராவ் பகதூர் எம். எஸ். நாகப்பாவின் மகனும், சிற்பியுமான எம். என். மணி நாகப்பாவின் சகோதரருமான எம். என். ஜெயராம் நாகப்பா உருவாக்கினார்.
அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள குறிப்பிடத்தக்க அடையாளங்களில் பழைய சஃபயர் திரையரங்க வளாகம், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், அமெரிக்க துணைத் தூதரகம் ஆகியவை அடங்கும்.
ஜெமினி ஸ்டுடியோ இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பார்சன் மேனர் என்ற வணிக வளாகமும், தி பார்க் என்ற 5 நட்சத்திர விடுதியும் கட்டப்பட்டுள்ளன. மேம்பாலத்திற்கு அருகே இவற்றுக்கு எதிரே, தோட்டக்கலைத் துறையால் கட்டப்பட்ட 20 ஏக்கர் பரப்பளவில் ரூ 80 மில்லியன் செலவில் செம்மொழி பூங்கா அமைந்துள்ளது.
Remove ads
விபத்துக்களும், நிகழ்வுகளும்
1998 சனவரில், அமெரிக்க துணைத் தூதரக கட்டிடத்திற்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு சிறிய குண்டு வெடித்தது.[6]
2012, சூன், 27 அன்று, பெருநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று வளைவில் சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்து மேம்பாலத்தில் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில்[7] 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் [4].
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads