அந்தமான் நிக்கோபார் தீவு மருத்துவ அறிவியல் நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அந்தமான் நிக்கோபார் தீவு மருத்துவ அறிவியல் நிறுவனம், போர்ட் பிளேர் (Andaman and Nicobar Islands Institute of Medical Sciences) என்பது இந்தியாவின் போர்ட் பிளேரில் உள்ள ஒரு மருத்துவப் பள்ளியாகும்.[1] அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மருத்துவ அறிவியல் நிறுவனம் ஒன்றிய அரசின் நிறுவனமாகும். இது அந்தமான் & நிக்கோபார் நிர்வாகத்தின் கீழ் அந்தமான் & நிக்கோபார் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் நிதியுதவியுடன் நிறுவப்பட்ட கல்லூரி ஆகும். 'தற்போதுள்ள மாவட்ட/பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய (58 கல்லூரிகள்) மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான' மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் மருத்துவப் பள்ளி நிறுவப்பட்டது. கல்லூரி ஒரு வருடத்திற்கும் குறைவான கால நேரத்தில் அமைக்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Remove ads

அமைவிடம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் தெற்கு அந்தமான் மாவட்டம், அட்லாண்டா முனையில், தேசிய நினைவு சிறை வளாகம் அருகே தற்காலிகமாகச் செயல்பட்டது. புதிய வளாகம் கார்பின்ஸ் கோவ், தெற்கு முனையில் உள்ளது.[3]

மருத்துவமனை

ஜி. பி. பாந் மருத்துவமனை அந்தமான் நிக்கோபார் தீவு மக்களுக்கான மருத்துவமனையாகச் செயல்படுகிறது. இது கிட்டத்தட்ட அனைத்து பொதுவான சிறப்பு மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது. புதிய புறநோயாளிகள் பிரிவு, வரவேற்பு / மையப் பதிவு, நோய் கண்டறியும் ஆய்வகங்கள், இரத்த வங்கி மற்றும் கலையரங்கம் / விரிவுரை மண்டபம் ஆகியவை உள்ளன.

துறைகள்

  • மயக்கவியல்
  • உடற்கூறியல்
  • உயிர்வேதியியல்
  • சமூக மருத்துவம்
  • பல் மருத்துவம்
  • தோல் மருத்துவம்
  • காது மூக்கு தொண்டை
  • தடயவியல் மருத்துவம்
  • மருந்து
  • நுண்ணுயிரியல்
  • மகப்பேறியல் & பெண்ணோயியல்
  • கண் மருத்துவம்
  • எலும்பியல்
  • குழந்தை மருத்துவம்
  • நோயியல்
  • மருந்தியல்
  • உடலியல்
  • மனநல மருத்துவம்
  • கதிரியக்கவியல்
  • அறுவை சிகிச்சை
  • காசநோய் & மார்பு

சேர்க்கை

கல்லூரியில் ஆண்டுதோறும் இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவை சிகிச்சை பட்ட படிப்பில் 100 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் படுகின்றன. இவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.[4][5][6] 75 இடங்கள் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மாணவர்களுக்கும், 10 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads