தேசிய மருத்துவ ஆணையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய மருத்துவ ஆணையம் (என். எம். சி)(National Medical Commission) என்பது 33 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் மருத்துவத் துறையின் ஒழுங்குமுறை அமைப்பாகும். இது இந்திய மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ நிபுணர்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் செயலை மேற்கொள்கிறது. இது செப்டம்பர் 25, 2020 அன்று இந்திய மருத்துவக் குழுவினை மாற்றி அமைக்கப்பட்டது.[1][2] இந்த ஆணைக்குழு மருத்துவத் தகுதிகளை அங்கீகரித்தல், மருத்துவப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளித்தல், மருத்துவ பயிற்சியாளர்களுக்குப் பதிவு அளித்தல், மருத்துவ நடைமுறையைக் கண்காணித்தல், இந்தியாவில் மருத்துவ உள்கட்டமைப்பை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட மருத்துவ பணிகளை மேற்கொள்கிறது.

விரைவான உண்மைகள் சுருக்கம், முன்னோர் ...

இது 2019 ஜனவரியில் 6 மாதங்களுக்கு உத்தரவு மூலம் நிறுவப்பட்டது. பின்னர் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நிரந்தர சட்டத்திற்கு 2019 ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கிய ஒப்புதலின் பேரின் நிரந்தரமாக அங்கீகரிக்கப்பட்டது.[3]

Remove ads

வரலாறு

Thumb

நிதி ஆயோக், இந்திய மருத்துவ குழுமத்தினை (எம்.சி.ஐ) தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப் பரிந்துரைத்தது. இந்த முடிவிற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளித்தன. இதனடிப்படையில் இந்தியப் பிரதமரின் ஒப்புதல் மற்றும் இது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்ட் 8, 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டது.[4][5][6]

இந்திய மருத்துவ கழகம் 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரால் 2019 ஜனவரியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம் தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப்பட்டது.

மருத்துவ கழகத்தினை மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, ஐந்து சிறப்பு மருத்துவர்களின் உதவியுடன் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்வி முறையை ஜூலை 2017 முதல் கண்காணிக்கிறது.[சான்று தேவை]

இந்திய மருத்துவ குழுமத்தினை (எம்.சி.ஐ) தேசிய மருத்துவ ஆணையமாக (என்.எம்.சி) மாற்றத் திட்டமிடல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவிற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன, பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுக்குப் பிறகு, இது நாடாளுமன்ற அமர்வுகளில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனால் இறுதி மசோதாவாக முன்மொழியப்பட்டது.[7] பின்னர் 2019ல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது.[8][9][10][11] இந்திய ஜனாதிபதி 2019 ஆகஸ்ட் 8 ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019க்கு ஒப்புதல் அளித்தார். இதனால் இது ஓர் சட்டமாக மாறியது.[2][4]

Remove ads

தேசிய மருத்துவ ஆணையத்தின் செயல்பாடுகள்

தேசிய மருத்துவ ஆணையத்தின் முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு:

  • மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களை ஒழுங்குபடுத்துவதற்கான கொள்கைகளை வகுத்தல்.
  • சுகாதாரத்துறையில் மனித வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பின் தேவைகளை மதிப்பீடு செய்தல்.
  • மசோதாவின் கீழ் செய்யப்பட்ட விதிமுறைகளுடன் மாநில மருத்துவ குழுமங்கள் இணங்குவதை உறுதி செய்தல்.
  • தனியார் மருத்துவ நிறுவனங்களில் 50% இடங்களுக்குக் கட்டணம் நிர்ணயிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குதல்.
  • எம்.பி.பி.எஸ் அல்லாத நடுத்தர அளவிலான சுகாதார சேவை வழங்குநர்களான செவிலியர் பயிற்சியாளர்கள் மற்றும் மருந்துகளைப் பரிந்துரைப்பதற்கான வரையறுக்கப்பட்ட உரிமைகளைக் கொண்ட மருந்தாளுநர்கள் போன்ற புதிய பணியாளர்களுக்கான வழிகாட்டுதல் உருவாக்கும்.[12]
Remove ads

இருக்கைகள்

இந்த ஆணையம் நான்கு தன்னாட்சி இருக்கைகளைக் கொண்டுள்ளது:

  • இளங்கலை மருத்துவ கல்வி வாரியம் (யுஜிஎம்இபி),
  • முதுகலை மருத்துவ கல்வி வாரியம் (பிஜிஎம்இபி),
  • மருத்துவ மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு வாரியம்
  • நன்னெறி மற்றும் மருத்துவ பதிவு வாரியம்

கூட்டமைப்பு

தேசிய மருத்துவ ஆணையம் 33 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும், இதில்:

a) ஒரு தலைவர் (மருத்துவ வல்லுநர்கள் மட்டும்)

b) 10 அலுவல்சாரா அலுவலர்கள்:

c) 22 பகுதிநேர உறுப்பினர்கள்:

  • மேலாண்மை, சட்டம், மருத்துவ நெறிமுறைகள், சுகாதார ஆராய்ச்சி, நுகர்வோர் அல்லது நோயாளி உரிமைகள் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பு அறிவு மற்றும் தொழில்முறை அனுபவம் உள்ளவர்களிடமிருந்து நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள்.
  • மருத்துவ ஆலோசனைக் குழுவில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பரிந்துரைக்கப்பட்டவர்களிடமிருந்து சுழற்சி அடிப்படையில் நியமிக்கப்பட்ட பத்து உறுப்பினர்கள்.
  • மருத்துவ ஆலோசனைக் குழுவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரிந்துரைக்கப்பட்டவர்களிலிருந்து ஒன்பது உறுப்பினர்கள் .[13]

இவர்களில் குறைந்தது 60% உறுப்பினர்கள் மருத்துவ பயிற்சியாளர்களாக இருக்க வேண்டும்.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads