அந்தர்வேதி

From Wikipedia, the free encyclopedia

அந்தர்வேதி
Remove ads

அந்தர்வேதி என்னும் ஊர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சகினேதிபள்ளி மண்டலத்தில் கோணசீமா பகுதி சோலைகள் நிறைந்து பசுமையான பகுதியாக உள்ளது. இதனால் அந்தப் பகுதி ஆந்திர கேரளா என்றே அழைக்கப்படுகிறது.[1] இந்தப் பகுதில் உள்ள ஒரு ஊர் இது ஆகும். இந்தக் கிராமம் வங்காள விரிகுடா மற்றும் கோதாவரி ஆற்றின் துணை நதியான வஷிஸ்டா கோதாவரி ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது.[2] அந்தர்வேதியில் உள்ள நரசிம்மசேத்திரத்தால் பெயர்பெற்றது.[3]

விரைவான உண்மைகள் அந்தர்வேதி అంతర్వేది, நாடு ...
Thumb
அந்தர்வேதி கடற்கரைக் காட்சி
Remove ads

விளக்கம்

புவியியல்ரீதியாக அந்தர்வேதி, 4 சதுர மைல் (6.4 கி.மீ.) பரப்பளவைக் கொண்டதாக உள்ளது.[3] இந்த கிராமத்தில் பாயும் வசிஷ்ட கோதாவரி ஆற்றுக்கு எதிரே புகழ்பெற்ற லக்ஷ்மிநரசிம்ம ஸ்வாமி கோயில் உள்ளது. மேலும் அந்தர்வேதியானது "இறைவனின் அருளால் இரண்டாம் வாரணாசி" என்று கூறப்படுகிறது.[3] கோதாவரி ஆற்றின் மறுபுறத்தில் உள்ள ஒரு தீவுக்கு படகு மூலம் பயணிக்கலாம். பின்னர் அங்கிருந்து கடலில் ஆறு கலக்கும் இடத்துக்குச் செல்லலாம்.[2]

Remove ads

நிலவியல்

அந்தர்வேதி 16.3333°N 81.7333°E / 16.3333; 81.7333,[4] இல் அமைந்துள்ளது மேலும் கடல் மட்டத்துக்கு நெருக்கமாக உள்ளது. முனைவர் திரிணாதராஜு ருத்ரராஜூவின் கூற்றுப்படி, கோவில் வளாகத்தின் வடிவமைப்பு டெல்டாவின் வடிவவியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆற்றின் சங்கமத்தில் நீரோட்டத்தின் வேகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியமும் கொண்டுள்ளது.[சான்று தேவை].

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads