அனெசிடெமசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனெசிடெமசு (Aenesidemus, கிரேக்கம்: Αἰνησίδημος Ainēsidēmos) என்பவர் ஒரு கிரேக்க ஐயுறவுவாத மெய்யியலாளர் ஆவார். இவர் கிரீட் தீவில் உள்ள நோசோசு நகரில் பிறந்தார். இவர் கிமு 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அலெக்சாந்திரியாவில் மெய்யியலைப் பயிற்றுவித்தார். சிசெரோவுக்குப் பின்னர் பெயர்பெற்றிருந்தார். இவர் பிளாட்டோவின் கல்விக்கழகத்தில் உறுப்பினராக இருந்திருக்கலாம். அதன் கோட்பாடுகளை மறுத்துவிட்டதால், தனக்கு முன்பே பிர்ரோவும் டைமனும் அறிதலியலின் தீர்க்கவியலாத சிக்கல்களுக்கான தீர்வாக முன்வைத்த தீர்ப்பு நிறுத்தி வைத்தல் (epoché) என்ற கோட்பாட்டை புத்துயிர்க்கச் செய்தார். இந்தச் சிந்தனைப்பள்ளி பிரோனியம் என்றும் மூன்றாம் ஐயுறவுவாதப் பள்ளி என்றும் வழங்கப்படுகிறது. பிரோனியம் என்ற இவரது முதன்மையான நூல் நான்கு எண்ணக்கருக்களை விவரிக்கிறது. அவையாவன, ஐயுறவுக்கான காரணங்கள், உண்மை, காரணமுடைமையை எதிர்ப்பதற்கான வாதங்கள், இயல் உலகக் கோட்பாடு, அறக்கோட்பாடு என்பனவாகும். இவற்றில் முதலாவதே மிகவும் சிறப்பானதாகும். தீர்ப்பை நிறுத்திவைப்பதற்கான இவரது வாதங்கள் பத்து பூடகங்களாக விளக்கப்படுகின்றன. இவரது எந்த நூலும் கிடைக்காததால் இவரைப் பற்றிய தகவல்களேதும் கிடைக்கவில்லை. ஆனால் இவரைப் பற்றி கான்சுடாண்டிநோபுலின் முதலாம் போசியசு (அவரது "மிரியோபிபிலியோன்" நூலிலும்), செக்ச்டசு எம்பிரிக்கசு ஆகியோரும், டையோஜீன்சு இலேயர்ஷியசு, அலெக்சாந்திரியாவின் பிலோ ஆகியோரும் விவாதித்துள்ளனர்.
Remove ads
வாழ்க்கை
அனெசிடெமசின் வாழ்க்கையைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் பிரோனியம் என்ற அவரது முதன்மையான நூல் பிளாட்டோவின் கல்விக்கழக உறுப்பினர் சிசெரோவின் நண்பரான டியூபெரோவுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலைக் கொண்டு அறிஞர்கள் இவரும் அக்கழக உறுப்பினராக இருந்திருக்கலாமெனக் கூறுகின்றனர். இதற்கு மேலும் இவர் இலாரிசா நகரப் பிலோவின் தலைமையில் அவர் செயல்பட்டிருக்கலாம் எனவும் அப்போதுதான் இவர் ஐயுறவுவாத மெய்யியலை பிலோவின் பொய்ப்புவாதத்துக்கு எதிர்வினையாக உருவாக்கியிருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.
Remove ads
பிரோனியம்
இவரது சிறந்த நூலான பிரொனியம் (Pyrrhoneia) பண்டைய கிரேக்க மொழியில் பிரோனோய் லோகோய் (Πυρρώνειοι λóγοι) எனப்பட்டது. ஆங்கிலத்தில் பிரோனிய மொழிவுகள் அல்லது பிரோனிய நெறிமுறைகள் என்றே அடிக்கடி மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் மாந்தன் தனது அறிதலியல் குறைபாடுகளால் எப்போதும் தீர்ப்பை நிறுத்தி வைக்கவேண்டிய தேவையை முதன்மையாகப் பேசியது. எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்நூல் கிடைக்கவில்லை. இது அக்காலப் பிளாட்டோ கல்விக்கழகத்தின் மெய்யியல் வறட்டுவாதத்துக்கு எதிராக எழுதப்பட்டதாகும். அனெசிடெமசு தனது காலப் பிளாட்டோக் கல்விக்கழகத்தினர், உறுதிப்பாட்டுவாதிகள் கூறியவை உள்ளடங்க சில கோட்பாடுகளை வலிமையாக உறுதிபடுத்திக் கூறுவதையும் மற்றவற்றை மறுப்பதையும் கடுமையாகக் கண்டிக்கிறார். எதையும் உறுதிபடுத்துவதோ மறுப்பதோ கூடாது என வாதிடுகிறார். மேலும் தெளிவாகக் கூறவேண்டுமென்றால், அனெசிமெடசு "X எப்போதும் F ஆகும் " அல்லது "X எப்பொதும் F ஆகாது" என உறுதிபடுத்தமாட்டாராம். ஆனால் அதற்கு மாற்றாக, "X எப்போதும் F ஆக அமையவேண்டியதில்லை" அல்லது "X எப்போதும் F ஆகாமலும் இருக்கவேண்டியதில்லை" என்பாராம். இதிலிருந்து அவரது ஐயுறவுவாத நிலைப்பாட்டின்படி எதிர்கூற்றுகளே ஏற்கமுடிந்த கூற்றுகளாகும். இதை, மாந்தனால் இதற்கு மேல் ஏதும் அறிதல் இயலாது, என்ற அடிப்படையைச் சார்ந்து கூறுகிறார். இது அவரது பத்துப் பூடகங்களில் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
பத்து பூடகங்கள்
தீர்ப்பு நிறுத்திவைத்தல் (epoché) குறித்த காரணங்களை இவர் பத்து பூடகங்களாக/முறைமைகளாக அவர் வகுத்துள்ளார். அந்த பூடகங்கள் பின்வருமாறு:
- பல்வேறு விலங்குகள் பல்வேறு புலன்காட்சி முறைமைகளைக் கொண்டுள்ளன;
- இவையொத்த புலன்காட்சி வேறுபாடுகள் தனித்தனி மாந்தரினும் காணப்படுகின்றன;
- தனி மாந்தனிலும்கூட புலன்களால் உணரப்படும் தகவல்கள் தன்முரணானவை;
- அதோடு, புற மாற்றங்களுக்கேற்ப நேரத்துக்கு நேரம் அவை மாறுபடுகின்றன;
- மேலும் கள/இட உறவுகளைப் பொறுத்து இந்த தீர்வுகளும் வேறுபடுகின்றன;
- பொருள்கள் காற்று, ஈரம் வழியாகத் தான் பார்க்கப்படுகின்றன;
- இந்தப் பொருள்களும் நிறம், வெப்பநிலை, அளவு, இயக்கம் போன்ற இயல்புகளில் எப்போதும் மாறியவண்ணம் உள்ளன.
- அனைத்துப் புலன்காட்சிகளும் சார்புடையனவே. மேலும் அவை தம்முள் ஊடாட்டம் புரிகின்றனவே.
- நம் மனப்பதிவும் மரபாலும் திரும்பத் திரும்ப நிகழ்தலாலும் குறுகிய உய்யமான துல்லியம் உடையதே.
- அனைத்து மாந்தருமே பல்வேறுபட்ட நம்பிக்கைகளையும் சமூக நிலைமைகளையும் கொண்டுள்ளதோடு, பல்வகைச் சட்டங்களுக்கு கீழ் வாழ்கின்றனர்.
வேறுவகையில் கூறவேண்டுமென்றால், சூழ்நிலைமைகளைப் பொறுத்து முடிவே இலாதபடி புலன்காட்சி வேறுபடுகிறது. ஒவ்வொருவரின் அக்கறைக்கேற்ப அது அமைதலால் மாந்தக் காட்சியாளர் எவராலுமே துல்லியமாக அதை மதிப்பிட முடியாது.. ஒவ்வொரு மாந்தனும் வேறுபட்ட புலன்காட்சியுடன் இருப்பதாலும் புலன் திரட்டிய தரவுகளை தனக்கே உரிய முறையில் அணிப்படுத்திப் புரிந்து கொள்வதாலும் முழு அறிவு என்ற எந்தவகை உறுதிப்பாட்டையும் முற்றிலுமாக எதிர்க்கிறார்.[1]
காரணமுடைமையை எதிர்த்த விவாதங்கள்
அவரது நூலின் இரண்டாம் பகுதி காரணமுடைமைக் (casualty) கோட்பாட்டை எதிர்க்கிறது. அவர் வாதங்களில் உள்ள நிறுவல்கள் அல்லது மெய்ப்பிப்புகள் இக்கால ஐயுறவுவாதிகளின் புரிதல்களுக்கு நிகராக உள்ளன. எடுத்துக்காட்டாக, காரணத்துக்கு இயல்பான நிலவல் கிடையாது. அது காணும் மனதிலேயே நிலவுகிறது. எனவே அதன் சரித்தன்மை கருத்து வடிவானதே அல்லது அகநிலையானதே. முதல்-விளைவு (காரண-காரிய) உறவை மாந்தனின் மனதால் மட்டுமே தீர்மானிக்க முடியாது. மேலும் அவர் வாதிடுகிறார்: முதலும் விளைவும் வேறுவேறானவை எனில், அவை ஒன்று ஒருங்கே நிலவவேண்டும் அல்லது தொடர்நிலையில் நிலவவேண்டும். ஒருங்கே நிலவினால் அடிப்படையில், முதலே விளைவாகவும் விளைவே முதலாகவும் அமையும். மாறாக அவை தொடர்நிலையில் நிலவினால், விளைவு முதலுக்கு முன்னால் அமையவியலாது என்பதால், முதல் விளைவுக்கு முன்னாக அமையவேண்டும். எனவே முதல் விளைவைத் தருவதன் முன்னம் ஓர் கால இடைவெளியும் அமையவேண்டும். இதன் பொருள் என்னவெறால், அடிப்படையில் அது அதுவாகவே இல்லை என்பது தான். அவரது இந்த வாதங்கள் பின்வரும் ஐயுறவுவாத நெறிமுறையில் இருந்து உருவாகின்றன. காரணங்களுக்கான இந்த முனைவான பொது எதிர்ப்பு panti logo logos antikeitai (" ஒவ்வொரு வாதத்தையும் அதேவலிவுடன் மற்றொரு வாதம் எதிர்க்கமுடியும்") எனும் சொற்றொடரில் இருந்து உருவானதாகும்.[1]
உலகியல், அறவியல் கோட்பாடுகள்
இந்த முடிவுக்கு வந்ததும், இராக்ளிட்டசின் இயல் உலகக் கோட்பாட்டை (செக்ச்டசு எம்பிரிக்கசு தனது Hypotyposes என்ற நூலில் விளக்கிய கோட்பாட்டை) தன்மயப்படுத்திக்கொண்டு, அறிவோனுக்குப் புலனாகும் பொருளின் ஒருங்கமையும் முரண்பாடுகளை ஏற்பதற்கு முதலில் பொருளில் அந்த முரண்பாடுகள் ஒருங்கே நிலவுதலை உறுதிப்படுத்திடவேண்டும் என வாதிடுகிறார். உண்மை, காரணமுடைமை எனும் இருகருத்துக்களையும் மறுத்ததும், அறவியல் வரன்முறைகளையும் ஒழித்துக்கட்ட அடுத்து வருகிறார். முதலில் எந்தவொரு மாந்தனும் நன்மை, இன்பம், மகிழ்ச்சி ஆகியவற்றை முழு பருநிலைக் குறிக்கோளாக அடைய முடியும் என்பதை மறுக்கிறார். மேலும் எல்லாச் செயல்களுமே இன்பம்-துன்பம், நன்மை-தீமை ஆகியவை உருவாக்கும் விளைவுகளே என்கிறார்.[1]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads