அன்னபூரணி தேவி கோவில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அன்னபூரணி தேவி கோயில் (இந்தி: अन्नपूर्णा देवी मंदिर), வட இந்தியாவின் புனித நகரமான வாரணாசியில் உள்ளது. இந்து மதத்தில் இந்த கோவிலுக்கு மிகுந்த சிறப்பு உள்ளது. [சான்று தேவை] இந்த கோவில் பெண்தெய்வம் அன்னபூரணிதேவிக்காகக் கட்டப்பட்டது. அன்னபூரணி ஓர் இந்து மதக் கடவுள். பார்வதி தேவியின் ஒரு வடிவமாகவும் இவரை கருதுவர். 1729 ஆம் ஆண்டில் மராட்டிய பேஷ்வா பாஜிராவால் கட்டப்பட்ட கோவில் இது.[2][3][4][5]
Remove ads
கட்டுமானம்
அன்னபூரணி தேவி மந்திர் நகாரா கால கட்டிடக்கலைக்கு சான்றாகும். பெரிய தூண்களைக் கொண்ட தாழ்வாரத்தில் தேவியின் படத்தை வைத்திருக்கின்றனர். இங்கு இரண்டு அன்னபூரணி சிலைகள் இருக்கின்றன. ஒன்று தங்கத்தினால் செய்யப்பட்டது. மற்றொன்று பித்தளையால் செய்யப்பட்டது. பித்தளையால் செய்யப்பட்ட சிலை தினமும் தரிசனம் கிடைக்கும். தங்கச் சிலை தரிசனம் வருடத்திற்கு ஒருமுறை தீபாவளிக்கு முந்தின நாள் கிடைக்கும்.
மத நம்பிக்கை
இந்து புராணத்தின்படி அன்னபூரணி துர்கா தேவியின் எட்டாவது வடிவம். வெள்ளை ஆடை அணிந்து அழகாக வீற்றிருப்பார்.
இடம்
இது வாரணாசி இரெயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இதனையும் காண்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads