அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்குகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அன்வார் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கு மலேசியாவில் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு வழக்காகும்.
1998 அன்வார் பாற்புணர்ச்சி வழக்கு
மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிம் மீது முதன் முதலில் 1998 ல் இவ்வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின் 2004ல் இவ்வழக்கிலிருந்து விடுதலையானார்.
2008 அன்வார் பாற்புணர்ச்சி வழக்கு
ஜூன் 29, 2008ல் இவருடைய உதவியாளர் முகம்மது செய்புல் புகாரி அசலன் என்பவர் தன்னை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக கூறி வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கு அரசியற் காரணங்களால், பிரதமர் மற்றும்அவரது மனைவியின் தூண்டுதலில் பேரில் புனையப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா கூறிவருகிறார். எனினும் இதனைக் காவல்துறை மறுத்துள்ளது. தக்க ஆதாரங்களுடனேயே இக்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.[1][2] இவ்வழக்கின் தீர்ப்பு சனவரி 9, 2012 அன்று வெளியிடப்பட்டது. அதில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லையென்றும், அவருக்கு எதிரான டிஎன்ஏ சான்று நம்பக்கூடியதாக இல்லை என்று கூறி விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Remove ads
2014 அன்வார் பாற்புணர்ச்சி வழக்கு
2008 ஓரினச்சேர்க்கை வழக்கில் விடுதலை பெற்றிருந்தாலும் தற்பொழுது இவருடைய உதவியாளர் முகம்மது செய்புல் புகாரி அசலன் என்பவர் அன்வார் தன்னை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாகக் கூறினார். இவ்வழக்கு தற்போது உச்ச நீதிமன்றதில் வழக்கு நடைபெற்றது.[3] அன்வார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதனை எதிர்த்து தொடரப்பபட்ட மேல் முறையீட்டிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. சுங்கை புளு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
